பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நானோ காருக்கு டாடா மோட்டார்ஸ் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
நானோ கார் வாங்குவதற்கு குறைந்த முன்பணமாக ரூ.35,000 செலுத்த வேண்டும். ஆனால், தற்போது வெறும் ரூ.15,.000 கட்டினால் போதும். நானோ உங்கள் வீடு தேடி வரும்.
அதுமட்டுமா, நானோ காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகையையும் போனசாக கொடுக்கப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது டாடா.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் தேபஷிஸ் ரே கூறியதாவது:
"பண்டிகை காலத்தை முன்னிட்டு நானோ காருக்கு சிறப்பு சலுகைகள் வழங்க உள்ளோம். குறைந்த முன்பணம், அதிக தவணை காலம் உள்ளிட்ட சலுகையுடன் கடன் வழங்கப்படும்.
இதன்மூலம், 60 மாதங்கள் வரை தவணை காலத்துடன் கடன் பெற முடியும். இதனால், குறைந்த மாதத்தவணையில் நானோ காரை வாங்கலாம்.
கார் விலையில் ரூ.20,000 வரை சலுகைகளை வழங்க இருக்கிறோம். இதனால், பண்டிகை காலத்தில் நானோ கார் விற்பனை நிச்சயம் ஏற்றம் பெறும்,' என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக