சனி, 27 ஆகஸ்ட், 2011

U.S கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!condoleezza ric

நியூயார்க்: லிபிய அதிபர் மும்மர் கடாபியின் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது சிக்கிய ஆல்பம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. காரணம் அந்த ஆல்பத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் புகைப்படங்களை தொகுத்து வைத்துள்ளார் கடாபி. மேலும் கான்டலீசா ரைஸ் மீது தான் காதல் கொண்டிருந்ததையும் அதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கான்டலீசா ரைஸ் மீது 'காதல்' கொண்டவர்கள் பட்டியல் மிகப் பெரியது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவரைப் பிடித்திருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் மஸிமோ டி அலீமா, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்டிரா உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அந்த வரிசையி்ல கடாபியும் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கடாபி ஏற்கனவே 2007ம் ஆண்டே ரைஸ் மீதான காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்தான். அந்த ஆண்டில் அவர் அல் ஜசீரா டிவிக்கு அளித்த பேட்டியில், லீஸா, லீஸா, லீஸா. நான் அவரை பெரிதும் நேசிக்கிறேன். எனக்குப் பிடித்த ஆப்பிரிக்க அழகுப் பெண் அவர் என்று கூறியிருந்தார் கடாபி.

அதற்கு அடுத்த ஆண்டே, ரைஸ், திரிபோலிக்கு விஜயம் செய்து கடாபியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்கா, லிபியா இடையிலான உறவில் லேசான மாற்றம் தெரிந்த சமயம்.

இதுமட்டுமே ரைஸ் மீ்தான கடாபியின் பாசமாக இதுவரை வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் ரைஸின் விதம் விதமான போட்டோக்களை ஆல்பம் போட்டு தனது இதயத்தில் புதைந்து கிடந்த காதலை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார் கடாபி என்பது தற்போது தெரிய வந்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. அந்த ஆல்பத்தில் விதம் விதமான போஸ்களில் ரைஸ் காணப்படுகிறார். கடாபியுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட் புகைப்படமும் அதில் உள்ளது.

புரட்சிப் படையினர் திரிபோலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரது வீட்டை புரட்சிப் படையினர் கைப்பற்றி அங்குலம் அங்குலமாக சோதித்து வருகின்றனர். அப்போதுதான் இந்த ஆல்பம் சிக்கியது.

கருத்துகள் இல்லை: