பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்ட சம்பவமொன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வோல்டன் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகள் மூவரையும் கண்டதும் குறித்த பெண் சமையலறைக்கு சென்று அதிகாரிகள் முன் தன்னை தானே வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார்.
குறிந்த பெண்ணின் கணவர் உயிரிழக்கும்முன் அவரை விடுதலை புலிகளுக்கான ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர் எனக்கூறி அவருக்கு இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியிருந்த குறித்த பெண்ணின் கணவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பெண் 2009ம் ஆண்டு பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து பலமுறை அகதி அந்தஸ்து கோரிய போதும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
சம்பவத்தின் பின் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த அவரது நண்பி தற்போது பாதிப்புக்குள்ளான பெண்ணின் 3 வயது குழந்தையினை பராமரித்து வருவதாக தெரிகிறது.
சம்பவம் தொடர்பில் நண்பி கருத்து தெரிவிக்கையில்:-
அதிகாரிகளை கண்டதும் அச்சமுற்று என்ன செய்வதென்று தெரியாது அவள் கைகளை கத்தியினை எடுத்து கீறிக்கொண்டாள்.
எனக்கு இலங்கை அரசியல் பற்றி ஏதும் தெரியாது ஆனால் படித்தும் கேட்டும் அறிந்து கொண்டுள்ளேன், அங்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என எண்ணுகிறேன் என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக