ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து, மேடையில் நின்றபடி பறக்கும் முத்தம் கொடுத்தார் நடிகை நமீதா. இதனால் கடுப்பான இயக்குநர் சேரன், நமீதாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நமீதா, கூடியிருக்கும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதத்தில் மச்சான்ஸ் என்று விளிப்பது வழக்கம். சில நேரங்களில் தனது அன்பைக் காட்ட அவர் ப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
இரு தினங்களுக்கு முன் அம்புலி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. கலைப்புலி தாணு, கேயார், பார்த்திபன் என முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சேரனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
பாடல் வெளியீடு முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்த நமீதா, ஹாய் மச்சான்ஸ் என தனது வழக்கமான ஸ்டைலில் பேச்சை ஆரம்பித்தார். பேசி முடித்தபிறகு, ரசிகர்களை நோக்கி முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல்.
பேசி முடித்த உடனே நமீதா அரங்கிலிருந்து கிளம்பிவிட்டார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது... ரசிகர்களை மச்சான்கள் என்கிறார் நமீதா. அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீங். பொதுமேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பொண்ணுங்க இதுபோல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா... மக்கள் மனசு மாறிப் போச்சு," கடுப்புடன்.
அப்படி என்ன தப்பா பேசிட்டேன்?
இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, "நான் அப்படியொன்றும் தவறாகப் பேசிவிடவில்லையே. எப்போதும் போல மச்சான்ஸ் என்றுதானே அழைத்தேன். ஒவ்வொரு பிரபலமும் மக்களை ஒவ்வொரு விதமாக அழைப்பதில்லையா... ரசிகர்கள் மீது நான் வைத்துள்ள அன்பைக் காட்டவே அப்படி அழைக்கிறேன். இது பல வருடங்களாக நான் செய்து வருவதுதான். இதை சேரன் புரிந்து கொள்ளட்டும். எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது!," என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக