கடந்த 50 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவருகின்றது. தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு சுகபோகம் அனுபவித்துவரும் இவர்களால் இதுவரையில் தமிழ் மக்கள் கண்ட பலன் என்ன? வெறுமனே அப்பாவி இளைஞர்களை பலிகொடுக்க தூண்டியதுதான் மிச்சம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின்போதே தமிழ் மக்கள் பாரிய நன்மைகளை அடைந்துள்ளனர். இதை மறந்து தேர்தல் காலங்களில் வெற்றுக்கோஸங்களுக்குப்பின்னால் தமிழ் மக்கள் அலைவதால் எதனையுமே அடைந்துவிட முடியாது என கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.
நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீமிடம் அமைப்பாளர் சந்திரபால விடுத்த வேண்டுகோளின்பேரில் மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கு சமாதான நீதவான்கள் நியமனமக் கடிதங்களை வழங்கும் வைபவம் கிண்ணையடி வித்தியாலயத்தில் ஆலய பரிபாலனசபை தலைவர் தலைமையில் நடைபெற்றபோது அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமாதான நீதவான்கள் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் சமுகப்பண்யாளர்கள் பலர் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக