செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

புத்தளத்தில் கொல்லப்பட்ட போலீஸ் கன்ஸ்டபில் திரு Bandara வின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக புத்தளம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது!


நேற்று இரவு புத்தளத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது கொல்லப்பட்ட போலீஸ் கன்ஸ்டபில் திரு Wijesundara Mudiyansalage Nawarathna Bandara வின் பூதவுடல் இன்று இரவு 7 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக புத்தளம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. அவ்வமயம் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜமிய்யதுள் உலமா சபைத் தலைவர், புத்தளம் நகர சபை தலைவர் மற்றும் வர்த்தக சங்கப் பிரதி நிதிகள் ஊர் பிரமுகர்கள் பூத உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
நொச்சியாகம ஜெயபிமையை சேர்ந்த திரு பண்டார 1981 இல் பிறந்தவராவார். 2006.10. இல் போலீஸ் சேவையில் இணைந்த இவர் ஒரு வருடத்துக்கு முன்னரே திருமணமானவர் என்பதுடன் அவரின் மனைவி 7 மாதக் கர்ப்பிணியுமாவார். தனது சகோதரர், பெற்றோரையும் இவரே கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதி மரியாதையின் போது வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ் அதிகாரி (senoor DIG) திரு பூஜித்த உட்பட உயர் மட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்களும் பொலிசாரும் என அனைத்து இன மக்களும் கலந்துகொண்டனர். அவ்வமயம் உரையாற்றிய சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ” சம்பவம் நடைபெற்றது முதல் பொலிசாரும் முப்படையினரும் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டோரை இனம் கண்டு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருப்பதாகவும் தன்னுடைய தொலைபேசி இலக்கங்களான 0773502727, 0777576867 என்பனவற்றுக்கு அதனை தெரிவிக்க முடியுமெனவும் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பொது மக்கள் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டும் ஊர் நன்மை கருதியும் உண்மையாக சம்பந்தப் பட்டவர்களின் விபரங்கள் தெரிந்திருந்தால் அறிவிக்குமாறு வேண்டப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை: