Mari S - tamil.filmibeat.com :
சென்னை: பீட்டர் பாலுக்கும் தனக்கும் நடந்த பிரச்சனை குறித்து விரிவாக
வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil
வனிதா விஜயகுமார் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை அடித்து துரத்தியது
உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்திரன் போட்ட பதிவை கொரோனா வைரஸை விட
வேகமாக பரவியது.
இந்நிலையில், தனக்கும் பீட்டர் பாலுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக
ட்வீட் போட்ட வனிதா, அது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 27ம் தேதி கொரோனா லாக்டவுனிலும் முத்த மழை பொழிந்தபடி
ஷாம்பைன் பொங்க, வயதுக்கு வந்த தனது இரு மகள்களையும் வைத்துக் கொண்டு நடிகை
வனிதா விஜயகுமார் பீட்டர் பால் எனும் விஷுவல் எடிட்டரை திருமணம் செய்து
கொண்டார். அந்த திருமண சந்தோஷம் முடிவதற்குள் சர்ச்சைகள் கிளம்பின.
சட்ட விரோதமாக
சட்ட விரோதமாக
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை விவாகரத்து செய்யாமலே
நடிகை வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டார் என ஹெலன் போலீஸ்
நிலையத்தில் புகார் கொடுத்தார். ஹெலனுக்கு ஆதரவாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,
கஸ்தூரி சங்கர் உள்ளிட்டோர் ஆஜராக அனைவரையும் போட்டா போட்டி பேட்டியால்
பந்தாடினார் வனிதாபுதன், 21 அக்டோபர், 2020
கோவா டூர்
மேலும், பீட்டர் பாலுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு பலரது
வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் வனிதா விஜயகுமார். அதுமட்டுமின்றி,
சமீபத்தில் கோவாவுக்கு டூர் போன இடத்தில் ஆரம்பமானது பிரச்சனை. அந்த
பிரச்சனை காரணமாக வெடித்த சண்டையால் தான் இப்போ இருவரும் பிரிந்துள்ளனர் என
வனிதா வீடியோ வெளியிட்டு கண்ணீர் வடித்துள்ளார்.
டீட்டோட்லர்னு சொன்னீங்க
டீட்டோட்லர்னு சொன்னீங்க
ஹெலன் சொன்னப்போ, அவர் குடிகாரர்லாம் இல்லைங்க, அவர் ஒரு டீட்டோட்லர்னு
சொன்ன அதே வாய், இப்போ அவர் ஒரு ஸ்மோக்கர் என்றும், குடிக்கு மொத்தமாக
அடிமையாகி விட்டார் என்றும், பீட்டர் பால் அடுக்கடுக்கான
குற்றச்சாட்டுக்களை வீடியோவில் அடுக்கி உள்ளார்.
10, 15 லட்சம் செலவு பண்ணேன்
சமீபத்தில் நெஞ்சு வலி என மருத்துவமனையில் பீட்டர் பால் அட்மிட் ஆகும்
போதே, எல்லாம் கர்மா என ஏகப்பட்ட பேர் கலாய்த்து வந்தனர். அது மட்டுமின்றி
இன்னொரு முறையும் பீட்டர் பால் போய் சேர்கிற கண்டிஷன்ல அட்மிட் ஆனாராம்.
இரண்டு முறையும் 10 லட்சம், 15 லட்சம் என செலவு பண்ணி காப்பாத்தினேன்.
ஆனால், அதையும் மீறி குடிப்பதால் தான் அவரை பிடிக்கவில்லை எனக்
கூறியுள்ளார் வனிதா.
ஏமாந்து விட்டேன்
ஏமாந்து விட்டேன்
ஒவ்வொரு முறையும் திருமண விஷயத்துல ஏமாந்து போய்ட்டே இருக்கேன். பீட்டர்
பால் விஷயத்துல அப்படி நடக்காது என்று நினைத்தேன். ஆனால், நான் எவ்வளவோ
சொல்லி சொல்லியும் கேட்காம குடிச்சிட்டே இருக்காரு, அவருக்கு ஏதாவது ஆனா
கூட என்னால் தாங்க முடியாது. இதுக்கு மேல செலவு பண்ணி அவரை காப்பாத்த
முடியுமான்னும் தெரியல என பீட்டர் பாலை நேரடியாக விளாச முடியாமல்,
மறைமுகமாக அவரை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை வனிதா கூறி அழுது புலம்பி
உள்ளார்.
அவர் குடிக்கிறாரு, சினிமாக்காரர்களிடம் தன் பெயரை சொல்லி கடன் வாங்கி
குடிக்கிறாரு, அவர்கள் உஷாராகி என்னிடம் அதை பற்றி சொன்னார்கள். இவர்
சரியாகி விடுவாரு, திருந்திடுவாருன்னு பார்த்தேன் திருந்தவே இல்லை. ஆட்களை
எல்லாம் விட்டு பல தடவை நோட்டம் பார்த்தேன். கையும் களவுமாக சிக்கினார்.
அவரை கண்டித்தேன். குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணாரு ஆனால், மறுபடி
மறுபடி அப்படியே பண்ணதால, நான் இந்த முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது என
விளக்கி உள்ளார்.
கண்டபடி திட்டும் நெட்டிசன்ஸ்
கண்டபடி திட்டும் நெட்டிசன்ஸ்
அடுத்த திருமணத்திற்கு ரெடியாகிட்டீங்களா வனிதா என்றும், அப்பவே லக்ஷ்மி
ராமகிருஷ்ணன் சொன்னாங்க, நீங்க தான் கேக்கல என்றும், கர்மா பூமராங் மாதிரி
அது நீ போன ஜென்மத்துல செஞ்சது இல்லை இந்த ஜென்மத்துல செஞ்சது தான்,
இனியாவது திருந்தி, உன் ரெண்டு பெண்களின் வாழ்க்கையை பற்றி யோசி என கண்டபடி
நெட்டிசன்கள் திட்டியும் அட்வைஸ் பண்ணியும் வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக