புதன், 21 அக்டோபர், 2020
இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்.. இராமேஸ்வரம் கடல் பகுதியில்
எஸ்.றொசேரியன் லெம்பேட் : இலங்கைக்குக் கடத்த இருந்த 500 கிலோ கிராம் மஞ்சள் மூட்டைகளை, இராமேஸ்வரம் கடல் பகுதியில் வைத்து படகுடன் இன்று (20) அதிகாலை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வேதாளைப் பகுதியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர்பட்டிணம், கீழக்கரைப் பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tm.lk
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக