செவ்வாய், 20 அக்டோபர், 2020

விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி, உ.வாசுகி கடும் கண்டனம்

Kanimozhi (கனிமொழி) @KanimozhiDMK விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

 Mathivanan Maran - tamil.oneindia.com :  சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் வக்கிர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஈழத் தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்திய முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்பு எழுந்தது.
முரளிதரன் வேண்டுகோள் இதனால் முத்தையா முரளிதரனே ஒரு அறிக்கையில், என்னுடைய வாழ்க்கை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளட்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று விஜய்சேதுபதியும் முத்தையா முரளிதரன் தொடர்பான படத்தில் இருந்து விலகிவிட்டார்.
விஜய்சேதுபதி முடிவு விஜய்சேதுபதி முடிவு ஆனால் இதை முழு விளக்கமாக விஜய் சேதுபதி விவரிக்காமல் நன்றி வணக்கம் என மட்டும் பதிவிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இதேபோல ஒரு பதிலை சொல்லி இருந்தார் விஜய்சேதுபதி. இதனால் இந்த பட விவகாரத்தில் விஜய்சேதுபதி காட்டிய அணுகுமுறை விமர்சிக்கப்பட்டு வருகிறது.



 இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மகளை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் வக்கிரமான பதிவுகளை சிலர் வெளியிட்டனர். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய மிரட்டலுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.


கனிமொழி கடும் கண்டனம் கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான உ. வாசுகி, விஜய் சேதுபதி என்ன வகை துரோகி என்கிற ஆராய்ச்சி ஒரு பக்கம் கிடக்கட்டும்... ஆனால் எழுதியவன் முதலில் மனித இனத்துக்கே துரோகி. கொள்கையை கொள்கையால் தோற்கடிக்க வேண்டும். எந்தத் தமிழ் இனம் பாலியல் வல்லுறவைப் பரிந்துரைக்கிறது?


வக்கிரத்தில் வடிவமைக்கப்பட்ட மூளைக்கு சொந்தக்காரன் செய்துள்ள இப்பதிவு கடும் கிரிமினல் குற்றம். தமிழகக் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப் போகிறதா? அல்லது பாஜக ஸ்டைல் உ.பி. காவல்துறையாக மாறி நிற்குமா? ஒன்று சொல்லிக் கொள்கிறோம், தமிழக மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: