மலையகம் நுவரெலியாவிலிருந்து புனிதக்கல்லை அயோத்தி ராமர் கோயில் கட்ட அனுப்ப போவதாகவும் புனிதக்கல்லை வைத்து இவ்வளவுகாலம் விசேட பூஜைகளோடு வழிபட்டு வருவதாகவும் சொன்னார்.இராவண்ன் சீதையை சிறைவைத்த இடம்தான் சீதாஎலிய. இங்கே சீதை வந்ததாகவும் இராமன் இவ்விடத்தில் வந்த போது தன் கால் பதித்த அச்சுக்கல்லையே புனிதக்கல் என்கிறார்கள் இங்கே நான் மதத்தை பேசவில்லை மதவாதிகள் வரிஞ்சுக்கட்டி வரவேண்டாம் இராமாயணத்தில் சீதைக்கு இலங்கை வந்ததால் கோயிலே கட்டுகிறீர்கள் ஏன் இந்தியாவில் கற்புக்கரசியான சீதையைக் கண்டுகொள்ளவே மாட்டேன்கிறார்கள் மாறாக மதுரையை கொளுத்திய கண்ணகிக்கு சிலை வைத்துள்ளார்கள் சீதைக்கும் ஜோடியாக மோடி அவர்கள் கோவில் கட்டதானே வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் நான் கல்விகற்கும் காலத்திலிருந்தே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சராக கணிசமான வேலைகளை மலையகத்தில் செய்துள்ளார் பாராட்டுக்கள் ஆனால் இராதாகிருஸ்ணன் அவர்களே கல்லு எப்படி புனிதமாகும்
புத்தருடைய பல்லு புனிதமாகும்போது கல்லு புனிதமாகாத என நீஙக கேட்கக்கூடும்
பெரியாரே இராயணமே பச்சப்பொய் அது ஒரு புனைவு இதிகாசம் என்றார்
அத்தோடு புனிதக்ல்லுக்காக பல பூஜைகளை புரியும் பக்தர்களுக்கு இந்த இராமர் மலையகத்துக்கு ஏதாவது அதிசயங்கள் செய்துள்ளாரா? ?இராமனால் நம் இலங்கைக்கு ஏதும் வருமானம் வந்ததா மலையக மக்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க பேசினாரா நாடு கடத்தும் போது புனிதக்கல் பேசியிருக்கலாமே
இங்கே மக்கள் குளவி கடியிலும் நரி கடியிலும் கொசு கடியிலும் சிறுத்தைக் கடியிலும் கம்பனிகளின் கடியிலும் சிக்கி சின்னாபின்னமாகி தெறித்து எங்கு ஓடுவது என்று அங்காலாய்த்துக்கொண்டிருக்கும்போது மகா பெரிய வரலாற்றின் ஒரு இனத்தை இடித்து இன்னுமொரு இனம் மீது எழுப்பும் கோயிலுக்கு புனிதக்கல் அனுப்புவதெல்லாம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லையா
மக்கள் இன்னும் சாணியைப் போட்டு மெழுகும் தரையில் பத்தடி காம்புரா லயத்தில் கிடக்கிறார்கள் சாஞ்சிமலை அஞ்சாம் நம்பர் லயத்தில் மழை வந்தால் மழைக்கு வீட்டைக்கொடுத்து மக்கள் வெளியே வந்துது குடையை பிடித்துக்கொண்டு நிற்பதை ஒரு மரண வீட்டுக்குப் போயிருக்கும்போது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இந்த புனிதக்கல்லை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? புனிதக்கல்தான் மக்களுக்கு என்ன செய்யப்போகுது?? ?மலையகத்திலே அண்மையில் பலாங்கொடை வளவ தோட்டத்தில் வைத்தியசாலைக்கு போகவே பாதையில்லை இந்த புனிதக்கற்களை போட்டு ஒரு ரோட்டு போட்டிருந்தாலே இரண்டு பெண்களை காப்பாற்றியிருக்கலாம் இரண்டு பிள்ளைகளும் தாயை இழந்து அனாதையாகிவிட்டன.
பாதையின்மையாலும் சாப்பாட்டுக்காக வேலை செய்யப்போய் தான் தன் அம்மா செத்துப்போனாள் என்று அவர்கள் வளர்ந்து
அறியும்போது எத்தனை ஆத்திரம் அடைவார்கள் உங்கள் புனிதங்கள் மீது !!!
மக்கள் குந்தி போக மலையகத்தில் நல்ல கக்கூஸ் இல்லை கக்கூஸ் இருக்கும் தண்ணீர் இருக்காது என்னுடைய பாடசாலை நாட்களில் தேயிலை தோட்டமே எல்லோருக்கும் பொதுவான மலசலகூடம்
பாராளுமன்ற உறுப்பினரே நல்ல சுகாதாரம் நல்ல வாழ்வு வசதி இருத்தலும் உயிர் வாழ்வதற்குமான உரிமையுமே அவனவனின் கடவுள் வாழும் இடம்
புனிதக்கற்கள் எவரது தலையிவ் விழாதிருக்கக்கடவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக