அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக
பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு
உள்ளதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ரிங் ஆஃப் பயர் பகுதியில்
அமைந்துள்ள அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த ஜூலை மாதமும் கடந்தாண்டு நவம்பர்
மாதமும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு விவரங்கள்
இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில இடங்களில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மக்கள் தாங்களாக வெளியேறியுள்ளனர். பூகோள ரீதியாக ரிங் ஆஃப்
பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு
காரணம் பூமிக்கடியில் உள்ள பெரும்பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதே
ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக