காட்சி 2: அதே காலகட்டத்துல நல்லா தெரிந்த ஒரு பொண்ணு வேலை வேணும்ன்னு கேட்டு இருந்தது. கோவிட் காலத்துல பொறுத்து நமக்கு சிரமமா இருக்கிறதால பொறுத்து குடுங்கன்னு சொன்னேன். வேலைக்கு அவங்களை எடுக்கலை... அவங்க வேற நிறுவனத்தில சேர்ந்துட்டாங்க.
காட்சி 3: வாட்சப்ல மறுபடி நாங்க முன்னாடி உதவி செய்த நிறுவனத்தின் "சாப்பாட்டுக்கு வழி இல்லை உதவுங்கள்" போஸ்ட் பயங்கரமா பரவிட்டு இருக்கு, எங்களுக்கும் அடிக்கடி எங்களுடைய அனைத்து எண்களுக்கும் periodically மெசேஜ் வந்துட்டே இருக்கு...
காட்சி 4: முன்னாடி வேலை கேட்ட பொண்ணு பழைய வேலையை 3 மாசத்துல ரிசைன் செய்துட்டு மறுபடி வேலை கேட்டு வந்தது.
ரிசைன் செய்துட்டு வந்ததுக்கு காரணம் பழைய வேலையில டார்கெட் வச்சு விரட்டுறாங்க முடிக்க முடிலன்னு சொல்லுச்சு... என்ன டார்கெட்ன்னு கேட்டப்போ அது ஒரு ட்ரெஸ்ட் சார், அவங்க நன்கொடையாளர்களுக்கு தினமும் கால் செய்து நன்கொடை கேக்கணும். ஒரு ஆளுக்கு மாசத்துக்கு 30,000 டார்கெட்ன்னு சொல்லுச்சு.
எனக்கு இந்த மேட்டர் கொஞ்சம் வித்தியாசமா இருந்தனால என்ன ஏதுன்னு விசாரிச்சேன். ஒரு பேட்ச்க்கு 40 பேர் வேலை செய்றாங்களாம். ஒவ்வொருத்தருக்கும் தினமும் 400 போன் நம்பர்கள் அன்றாடம் கொடுக்கப்படுமாம், காலையில இருந்து அவங்களுக்கு எல்லாம் கால் பண்ணி பேசிட்டு, வாட்சப், மெசெஞ்சர்ன்னு அவங்களுக்கு டெக்ஸ்ட் அனுப்பி பணம் கேக்கணுமாம். எவ்ளோ முடியுமோ அவ்ளோ கீழ இறங்கி படிக்க காசு இல்லை, சாப்பிட காசு இல்லைன்னு கெஞ்சணுமாம். அதுக்கு தனியா ட்ரைனிங் இருக்காம். யாரு அந்த ட்ரெஸ்ட்ன்னு விசாரிச்சப்போ நாம உதவிய அதே ட்ரெஸ்ட்ன்னு தெரிஞ்சது....!!
இந்த மேட்டர் ஆச்சரியமா இருந்தது. 40 பேர் ஆளுக்கு 30,000 என்றால் 12 லட்சம் மாசத்துக்கு. அதுவும் ஒரு பேட்ச் மட்டுமே.. மொத்தம் 2,3 பேட்ச் இருக்குன்னு சொன்னாங்க. சரி நிறைய அனாதை குழந்தைகள் இருக்காங்க அதனால உதவி தேவைப்படுதுன்னு நினைச்சேன்... அப்போ அந்த பொண்ணு ஒரு மேட்டர் சொன்னது... ஒரே குழந்தையை பல நபர்களிடம் காட்டி அவங்க படிப்புக்கு உடைக்கு நீங்க தான் ஸ்பான்ஸர்ன்னு சொல்வாங்க. அதாவது ஒரு குழந்தையின் ஒரு மாச ஸ்பான்சர்ஷிப் 7000 என்றால் நீங்க சந்தோசமா குடுப்பீங்க, அதே மாதிரி 10 பேர் அதே குழந்தைக்கு குடுப்பாங்க ட்ரஸ்ட்டுக்கு 70,000 வரும். இப்படி ஒவ்வொரு மாசமும் குடுக்கிறவங்க இருக்காங்க..
ட்விஸ்ட்டு: இந்த 40 பேரும் அந்த குழந்தைகளை பார்த்ததே இல்லியாம். உண்மையில் எத்தனை குழந்தைங்க இருக்காங்கன்னே தெரில.. ட்ரெஸ்ட் வாசலில் உள்ள போட்டோக்களையும் அவங்க ரிலீஸ் செய்ற போட்டோக்களை மட்டுமே நாம பாக்குறா மாதிரி தான் வச்சிருக்காங்க. ஒரு முறை ஒரு டோனார் குழந்தைகளை பார்க்காம குடுக்க மாட்டேன்னு சொன்னப்போ அவரை ட்ரஸ்ட்டுக்குள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. அவர் ஸ்பான்சர் பண்ற ஒரு பையனை மட்டும் காட்டினாங்களாம். அந்த பையன் கிழிந்த டவுசருடன் picture of povertyயில இருந்திருக்கான். இந்த பொண்ணு, "நானே அந்த பையனுக்கு 3 ஸ்பான்சர் கிட்ட பணம் வாங்கி கொடுத்திருக்கேன் அப்படின்னா மத்தவங்க எவ்ளோ வாங்கி கொடுத்திருப்பாங்க?? அப்படி இருக்கும் போது 200 ரூபாய்க்கு டவுசர் கூட வாங்கி போடலைங்கிறது சந்தேகமா இருக்குன்னு" தான் அந்த வேலையை செய்ய மனசு இல்லாம ரிசைன் பண்ணிட்டேன் சொல்லுச்சு...
ஆக, நம்மோட எமோஷன்ஸை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்காவா ப்ளான் போட்டு உருவிட்டு இருக்கிறாங்கன்னு தெரிந்தது... நாமளே எவ்வளவோ பேருக்கு விசாரிக்காம ஒரு புகைப்படத்தை மட்டும் வச்சு இந்த மாதிரி உதவி கேக்குறதை பார்வேர்ட் செய்றோம் இல்லியா... கவனமா இருங்கன்னு சொல்றதுக்கு தான் இந்த பதிவு..
அந்த நிறுவனத்தின் டெக்ஸ்ட் இன்னிக்கும் எனக்கு வந்திட்டிருக்கு பேஸ்புக்லையும் வாட்சப்லையும் திட்டமிட்டே இது பரப்பப் படுகிறது. எச்சரிக்கை... கவனம். நல்லா விசாரிச்சுட்டு கண்ல பாத்துட்டு உதவுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக