/tamil.theleader.lk :ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.
ஆனால் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான அரசாங்கத்தின் தேசியவாத நிலைப்பாடு, அமெரிக்க-இலங்கை குடிமகனான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இனவாதிகளின் கருத்து பாதிப்பை ஏற்படுத்தும் என தெறிய வருகின்றது . 20 இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவுக்கு இதுவரை இருபத்தொரு அரசு எம்.பி.க்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை விதிக்கு எதிராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று இரவு (21) நடந்த கலந்துரையாடல் சில உடன்படிக்கைகளுடன் முடிவடைந்துள்ளதாக தெறிய வருகின்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, அசங்க நவரத்ன, வீரசுமன வீரசிங்க மற்றும் டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது நெருக்கடியில் இருக்கும் இரட்டை குடியுரிமை விதிமுறை குறித்து இக் குழுவினரிற்கு இடையே ஒரு நீண்ட கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கான இடைக்கால ஒருங்கிணைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸ் ஏற்பாடு செய்திருந்ததாக அறியக்கிடைக்கின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக