மனுஸ்மிருதியிலிருந்து மேற்கோள் காட்டும் தலைவர்கள், ஆரம்ப காலத்தில் புத்தரும், பவுத்தமும் பெண்களையும், பெண்மையையும் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவார்களா?
பவுத்தத்தின் “தம்மம்” என்பதே பெண், இச்சை, செக்ஸ், பாலியல் துய்ப்பு என உழலும் “சம்சாரத்திலிருந்து” விடுதலை பெறுவதே. ”நிர்வாணம்” என்பதே ஆசையை மறப்பதிலிருந்து இருந்து தான் ஆரம்பிக்கிறது, அதில் பெண்ணாசையும் உண்டு.
The point is, ஹிந்துத்துவமோ, பவுத்தமோ, சமணமோ, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பிற மத வழிபாட்டு முறைகளோ, எல்லாமே பெண்களை second class citizenகளாக தான் வைத்து இருந்தார்கள்.
பெண் ஒரு மாயை. பெண் என்றால் காமம் மட்டுமே. பெண் என்பவள் மயக்கத்தினை உருவாக்கும் ஒரு கருவி. செக்ஸும், பாலியல் துய்ப்பும் நம்மை “உண்மையிலிருந்து” விலக்கி விடும். பெண்களையும், பெண்கள் மூலமாக உருவாகும் குடும்பங்களையும் நிராகரிப்பதன் மூலமே “முக்தியை” அடைய முடியும். அந்த மனநிலை தான் இன்றைக்கு வரைக்கும் “மோகினி” என்றால் ஆசை நிறைவேறாத காமத்துக்கு அலைகின்ற பேய் வரைக்கும் வந்திருக்கிறது.
பெண் = lust.
பவுத்தமோ, சமணமோ, ஹிந்து மதத்தின் பல்வேறு கிளைகளோ இதையே தான் வெவ்வேறு மொழியில் சொன்னார்கள்.
இந்த மாதிரியான சூழலில் இருந்து தான் இன்றைக்கு உயர்ந்து இருக்கிறோம். இனியும் பெண்களின் முதன்மையையும், பிரதிநிதித்துவத்தையும் முன்பு கொண்டு செல்ல வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. வெற்று வாய் சவடால்களில் அதை செய்ய முடியாது.
யார் சரி, தவறு என்கிற விவாதத்துக்குள் போக விருப்பமில்லை. ஏன் என்றால், இரண்டு பக்கங்களுமே தங்களுக்கான “அரசியல் தேவைக்ளுக்காக” பேசி கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்து நாம் நீண்ட தூரம் வந்து விட்டோம். திரும்பவும் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டு இருந்தால், நமக்கும் சங்கிகளுக்கும் ஒரு வேறுபாடும் இருக்காது. Let's move on.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக