ஆசிரியர் Samuel Paty அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் 14 வயது 15வயது மாணவர்கள் நீதிபதியினால் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள். இந்த மாணவர்கள்தான் ஆசிரியரை கொலையாளிக்குக் காட்டிக் கொடுத்தார்கள். இந்த மாணவர்களுக்குக் கொலையாளி பணம் வழங்கி ஆசிரியரைக் காட்டித்தருமாறு கேட்டிருந்தார்.
ஆசிரியர் பாடசாலை வகுப்பில் இறைதூதரின் கேலிச்சித்திரத்தை காண்பிப்பதற்காக அவரை மன்னிப்பு கோர வைப்பதற்காகவே அவரை நாடி வந்திருப்பதாக இந்த கொலையாளி மாணவர்களிடம் கூறியிருக்கின்றார்.
இதனை அடுத்தே மாணவர்கள் ஆசிரியரை காட்டிக் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆசிரியரைக் காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக 14 வயது 15வயது மாணவர்கள் தற்பொழுது சிறைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சந்தேக நபரும் தற்பொழுது சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொலையாளி உடன் தொலைபேசியில் உரையாடி இருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.
தீவிர இஸ்லாமிய சிந்தனை வாதியான அப்துல் ஹக்கீமுக்கும் தற்பொழுது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக