ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த மர்ம 75 நாட்களில் தமிழக
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த
செப்டம்பர் மாதம் தமிழக அரசின் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
இதில், பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து நீதிபதி கிருபாகரன், தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை முறையாக பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் கூறி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளாட்சித் தேர் தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் இதை எதிர்த்த தமிழக அரசு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மூலம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்தது பெரும் தர்ம சங்கடத்தை அதிமுக அரசுக்கு ஏற்படுத்தியது.
இந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஐரான வழக்கறிஞர் வழக்கு தொடர்பான முறையாக ஆவணங்களை நீதிபதி முன்பு சமர்பிக்கவில்லை.
அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைத்திடம், ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? ஆவணங்களை ஒவ்வொன்றாக தருகிறீர்களே. எத்தனை முறை தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் அளிப்பது... என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர். அத்தோடு நில்லாமல் அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களையும் , ஆவணங்களையும் தந்து முடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு
மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு
பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து
கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் -
ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு ;
பதிவை பகிர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக