வியாழன், 23 பிப்ரவரி, 2017

நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்!

முன்னாள் முதலமைச்சரான ஒ.பன்னீர் செல்வம் வகித்து வந்த மிக முக்கியமான துறையான நிதித்துறை மற்றும் திட்டம் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகியவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒ. பன்னீர் செல்வத்திடத்திடமிருந்து, ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற ஒரு வாரகாலமாக நிதித்துறை அமைச்சகத்தை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் நிதியமைச்சகம் ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் , நடைபெறும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும் என்பது குறிபிடத்தக்கது.
நிதி அமைச்சர் பதவி செந்தில்பாலாஜி அல்லது டி. டி தினகரனின் வலது கரமான தங்க தமிழ்செல்வன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படும் என கூறி வந்த நிலையில், ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விஷயம் கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா தினகரனின் அசைவுகளை விரும்பவில்லை என்று இதன் மூலம் தெரிவதாக கூறப்படுகிறது. தினகரனின் பதவியும் பறிக்கப்பட்டு அது திவாகரனிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.லைவ்டே

கருத்துகள் இல்லை: