சனி, 25 பிப்ரவரி, 2017

மோசடி ஜாக்கியும் மோசடி மோடியும் ... இருவரும் ஒருதடவை அணிந்த உடையை மறு தடவை அணிவதே இல்லை!


தன் மகளுக்கு கல்யாணம் குழந்தை குட்டி ... ஊரான் மகள்களுக்கு சன்யாசம் மோட்சம்
மைசூரில் பிறந்து, வளர்ந்து ; தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய, கோவையில் 1989-ம் ஆண்டு, தனது காலடியை  வைத்தார். பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை,  கோபம் போன்றவற்றை தனது யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வர, தமிழ் மக்களை எல்லாம் “ஆனந்த அலையில்” சிக்கவைக்க,  “வாருங்கள் உங்களில் மலருங்கள்” என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களின் சுருக்கமான கிரிமினல் வரலாறு இதுவாகும். ரூ.14 கோடி மதிப்புள்ள R 22 ரக ஹெலிகாப்டர், ரூ.40 இலட்சம் விலையுள்ள ஹம்மர் கார், பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள BMW மற்றும் Honda மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில், ஜீன்ஸ் பேண்ட் + கருப்பு கண்ணாடியுடன் வலம்வரும் நவீன சாமியார் தான் ஜக்கி. பக்தர்களிடம் “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு” என்ற கார்ப்பரேட் உலகிற்கு இசைவான, இச்சையைத் தூண்டும் சாமியார்.< கடவுள் நம்பிக்கை இல்லாதவராக பேசிக்கொண்டே, இந்துத்துவா’விற்கு இசைவான சமயப் பணிகளை மேற்கொள்பவர். 1999ல், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில்  தியான’லிங்கம்’ அமைத்தவர்;சத்சங்கங்கள் என்ற பெயரில் கூட்டு வழிபாடு என்ற சமய வழிபாட்டு முறையை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களின் மூளையைச் சலவை செய்பவர்.
இப்போது அவரது மெகா திட்டமான “ஆதியோகி” எனும் சிவன் சிலையை அமைத்துள்ளார். அதற்கு தான் நாட்டின் பிரதமரே வருகிறார் !!!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வன – கட்டிட விதிகளை மீறி, தமிழக அரசை ஏமாற்றி 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டியுள்ளதும், பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழக அரசு அவற்றை  முழுவதும் இடிக்க உத்தரவு போட்டிருப்பதும் கூட பரவலாக  அறியப்படாத செய்தி ஆகும்.
நில அபகரிப்பு,சொத்துக் குவிப்பு,  இயற்கை அழிப்பு, சமூக விரோத குற்றங்கள் பற்றி பதஞ்சலி புகழ் பாபா ராம்தேவ் போன்ற ஒரு யோகா வாத்தியார் தான் ஜக்கி எனப்படும் ஜகதீஸ்.
ஜக்கியின் கோவை பிரவேச(ஷ)த்திற்கு முன் மைசூரைச் சேர்ந்த மறைந்த ‘ரிஷி பிரபாகர்’ என்னும் யோகா குருவிடம் ஆசிரியராக இருந்தவர் ஜக்கி.
ரிஷி பிரபாகரால் கோவை-திருப்பூருக்கு வகுப்பு நடத்த அனுப்பப்பட்ட ஜக்கி அங்குள்ள செல்வ வளத்தைக் கண்டு ரிஷியின் தொடர்பை துண்டித்து கொண்டார்.
(இவரோடு ஒன்றாக ரிஷியிடம்  இருந்த மைசூர் ராமகிருஷ்ணன் மற்றும் வித்யாகர் இன்றும் யோகா வகுப்புகள்  நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். )
கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச் சரகத்தில் உள்ள, நொய்யல் ஆறு உருவாகும் அடர்ந்த வனப் பகுதியை ஒட்டியுள்ள ‘இக்கரை போளுவம்பட்டி’ என்ற கிராமத்தில், முதலில் 1989ல் சிறிது நிலம் வாங்கினார்.
படிப்படியாக விரிவாக்கினார். ராஜா வாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்துக் கொண்டார். இது முக்கியமான யானை வழித்தடம் ஆகும்.
1993 ல், 37,000 ச.மீட்டர் பரப்பில் ஆசிரமம் உருவாக்கினார்.1999 ல், சிவபெருமான் அடையாளமான தியானலிங்கம் அமைத்தார். பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் பெற்றார்.
பத்தாண்டுகளில், திமுக ஆட்சி, கருணாநிதி ஆசியுடன், 42.77 ஏக்கர் பரப்பில், 63,380 ச.மீட்டர் அளவில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால்,  மலைதல பாதுகாப்பு குழுமம் HACA அனுமதி பெறப்படவில்லை.
(6.7.2011 ல் தான், புதிதாக 28,582.52 ச.மீ கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.)
லட்சக்கணக்கான மரங்கள், காட்டுயிர்கள் அழிக்கப்பட்டன.சந்தன மரங்கள் உட்பட பழமையான, அரிதான மரங்கள், செடிகள் அழித்தொழிக்கப் பட்டது.
ஆசிரமத்தை சுற்றியும், சட்டவிரோதமான மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் தடம் மாறியதால், பழங்குடியினர் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்கு- மனித மோதல்கள் நடைபெற்றன.
2006-11 காலங்களில் மட்டும் 50 யானைகள் இறந்ததாகவும், 57 மனிதர்கள் கொல்லப்பட்டதாகவும் அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2011-12 ல், கோவை வனத்துறை பலமுறை எச்சரிக்கை செய்தது. ஈசா ஆசிரமத்தால், கட்டிடங்கள் விரிவடைவதால், பக்தர்கள்  வருகை லட்சத்தில் அதிகரிப்பதால், வனம் மற்றும் வன உயிர்களுக்கு (குறிப்பாக யானைகளுக்கு) பெரும் தீங்கு ஏற்படுகிறது என்றும், அருகாமையில் உள்ள தாணிக்கண்டி பழங்குடியினர் குடியிருப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது என்றும் எச்சரித்தது.
நகர திட்டமிடல் இயக்குநரகம், 24.12.2012 ல், ஈசா ஆசிரமத்தை இடிக்குமாறும் உத்திரவிட்டது. புதிய கட்டுமானங்களை நிறுத்தவும் கோரியது.
ஆனால், இதற்கெல்லாம் பிறகும் கூட, மாவட்ட ஆட்சியரிடம் வெறும் 300 ச.மீ கட்ட அனுமதியை வாங்கிவிட்டு, 1 இலட்சம் ச.அடியில், 112 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள்,விவசாய சங்கங்கள், இடதுசாரிகள் தொடர்ந்து ஈசா ஆசிரமத்தை  எதிர்க்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தில் வரும் மஹாசிவராத்திரி விழா, சத்சங்கங்கங்கள் எனப்படும் கூட்டுத் தியானத்தில் பங்கேற்க வரும் 3 லட்சம் பேரின் நடமாட்டம், விழாவின் ஆரவார ஓசைகள் பெரும் கேடாக மாறியுள்ளது என,2013, 2015 ல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. எதிரப்புகளும் கட்டமைக்கப்பட்டன.
தற்போது 2017 – பிப் 17ல், வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம் விழாவை தடுக்கக் கோரி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆனால், ஈசாவுக்கு ஆதரவாக வழக்கு மார்ச் 3 ந் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, பிப். 24 அன்று இத்தகைய கிரிமினல் ஜக்கியோடு பிரதமர் மோடி கரங்கோர்த்து விழா நடப்பது உறுதியானது.
ஜக்கி, ஜக்கியின் குடும்பம், சிஷ்யர்கள், ஆசிரமம், போதனைகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
தன்னை  ஒரு “வாழும்  enlightened குரு” என்றும் இது தனது “மூன்றாவது பிறவி” என்றும் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்ந்த  ஜாதியில் பிறந்தவர்  என்றும் இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிரை விட்டதாகவும் பிரசங்கத்தில் கதைகள் பலவும் சொல்லி வருகிறார்.
தியானலிங்கம் கோவில் கட்டுவது தான் தனது மூன்று பிறவியின் நோக்கம் என்றும் அது முடிவடைந்த உடன் உயிரை விட்டு விடுவதாக உறுதி கொடுத்திருந்தார். ஆனால், ஆதி யோகி சிலை எனத் தொடர்கிறார்.
ரிஷி பிரபாகரிடம் யோகா ஆசிரியராக ஜக்கி  இருந்தபோது, முந்தைய மணவாழ்க்கை முறிந்து மனமுடைந்த நிலையில் யோகா வகுப்பில் கலந்து கொள்ள வந்த கர்நாடகத்தைச் சார்ந்த  விஜி என்பவரோடு ஜக்கிக்கு தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. விஜி, ஜக்கியோடு 1998-ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்.
கோவையில் பாரம்பரிய மிக்க பெருமுதலாளித்துவ. ELGI குரூப்பை சேர்ந்த ELGI  வரதராஜ் அவர்களின் மகன் சுதர்சன் வரதராஜ்.
அவர் ELGI நிறுவனத்தின் செயல் அதிகாரி(EXECUTIVE DIRECTOR) ஆவார். தனது மனைவி பாரதி வரதராஜை யோகா கற்றுக்கொள்ள அறிமுகம் செய்து வைத்தார். இவர் நடத்திய 90 நாள் ‘முழு யோகா’ வகுப்பில் தனது அலுவல்களையும் விட்டு தனது மனைவியுடன் கலந்து கொண்டார் ELGI சுதர்சன்.
செல்வ சீமாட்டி பாரதி ஆந்திரா முன்னாள் எம்.பி., ஒருவரின் மகள்.அவர்  இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆவார்.  பாரதியை  ஜக்கி
பூர்வ ஜென்ம கதைகள் பேசி கவர்ந்தார்.
ஜக்கியும்,பாரதியும் தியானலிங்கம் கட்டுவதற்காக பல கோவில்களை பார்த்துவர இந்திய முழுவதும் காரிலே பயணித்தார்கள்.
அதற்கு “கர்ம யாத்ரா” என்று பெயர்.   இவர்கள் நெருக்கம் வளர, விஜிக்கு ஜக்கிமேல் சந்தேகம், சண்டை. அது யோகா வகுப்பில் தீட்சை கொடுக்கும் இடம் வரை பரவியது.
பிறகு விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டார். விஜியின் தந்தை காங்கன்னா தன் மகளை  ஜக்கிதான் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் ஜக்கிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கொடுத்த புகாரில் இவர் சிக்காமல் 6 மாதம் ஓடி ஒளிந்து, கரூர் மற்றும் திருப்பூர் தொண்டர்களின் தயவால் தப்பி மனைவி விஜிக்கு ஒரு சமாதியும் எழுப்பிவிட்டார்.
பாரதியும் தனது கணவர் சுதர்ஷனை விவாகரத்து செய்துவிட்டு குடும்பத்தை துறந்து ஜக்கியுடேனே ஆன்மீக பணியாற்ற வந்து விட்டார்.

கருத்துகள் இல்லை: