திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஆளுநர் வித்தியாசாகர ராவ் : வேண்டுமென்றால் கோர்ட்டுக்கு போங்க .. இவரு சொல்லல அந்த 600 கோடி ...

கோர்ட்டுக்குப் போங்க பழனிச்சாமியிடம் 122 பேர்
அறிக்கை கேட்பேன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேச்சு சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த அமளி மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தலையிட பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேவை என்றால் கோர்ட்டுக்குப் போய் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள் என்று தன்னைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் அவர் கூறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சட்டசபை செயலாளரிடமிருந்து அவர் அறிக்கை கேட்டிருந்தாலும் கூட அவர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார் என்றும் சொல்கிறார்கள். இது சம்பிரதாயத்துக்காக பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். நேற்று திமுக எம்.பிக்கள் குழு சந்தித்தது. அதேபோல ஓ.பி.எஸ். குழுவும் ஆளுநரை சந்தித்தது. அப்போது இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் ஆளுநர் சாதகமாக பதிலளிக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
அப்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொணியில்தான் ஆளுநர் பேசியதாக கூறப்படுகிறது. அதாவது எதிர்க்கட்சியினர் சபையில் இருந்திருந்தாலும் கூட, ரகசிய வாக்கெடுப்பே நடந்திருந்தாலும் கூட ஆளுங்கட்சிதான் வென்றிருக்கும் என்று ஆளுநர் பேசியதாக சொலல்லப்படுகிறது.


ஆளுநர் மேலும் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் 122 பேரின் ஆதரவு இருந்ததாகவம், எனவே அவர் கூறிய எண்கள் மீது சந்தேகம் வர வாய்ப்பே இல்லை என்றும் ஆளுநர் கேட்டாராம்.
மேலும் அவர் கூறுகையில், சட்டசபையில் என்ன மாதிரியான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை சபாநாயகருக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் சட்டசபையிலிருந்து அறிக்கை பெறுவேன். இருப்பினும் இதில் தலையிட மாட்டேன்.
சபாநாயகர் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது. என்ன மாதிரியான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆளுநர் கூறினாராம்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு இதில் திருப்தி இல்லை என்றால், தேவை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு முறைப்படி நடக்கவில்லை என்று முறையிடலாம்.
 நீதிமன்றம் அதில் திருப்தி அடைந்தால் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடலாம். ரகசிய வாக்கெடுப்புக்கும் கூட உத்தரவிடலாம். பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவை நடத்தவும் உத்தரவிடலாம். இதுதான் சரியான வழி என்றும் ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் ஆளுநர் கூறி விட்டாராம்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: