சனி, 25 பிப்ரவரி, 2017

ஜெ. மரணம் குறித்த,, டாக்டர் ராமசீதா கைது! ஏன் இந்த அவசரம்? எங்கேயோ இடிக்கிறது.


டாக்டர் ராமசீதா போலி மருத்துவர் என்று கூறும்  சசிகலாவின் காவல் துறை நேர்மையானதா? அந்த 75 நாட்கள் பயங்கரத்தையே ஊத்தி மூடிய காவல்துறை டாக்டர்  ராமசீதாவையும் ஊத்தி மூடிவிடுமோ?

நக்கீரன் : நான் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் என்றும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே இறந்த நிலையில்தான் கொண்டுவந்தார்கள். விசாரணை கமிஷனின் உண்மையை சொல்வேன்” என்றும் சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெ.தீபா பேரவைக்கூட்டத்தில் பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய ராமசீதா டாக்டரே அல்ல என்பதை முதன் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம்; “ராமசீதாவின் வாக்குமூலமே ஒரு டாக்டர் பேசுவதுபோன்று இல்லை. மேலும், பரபரப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் பேசுவதுபோல்தான் தெரிகிறது” என்று மருத்துவ நண்பர்கள் நம் காதை கடிக்க, விசாரணையில் இறங்கினோம்.
இதுகுறித்து ராமசீதாவின் நம்பரை தேடி கண்டுபிடித்து தொடர்புகொண்டோம். ஆனால் நாட் ரீச்சபில் என்று வந்தது.>அதனால், ஆர்.கே.நகரில் ஜெ.தீபா பேரவைக்கூட்டத்தை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை தொடர்புகொண்டு கேட்டபோது,  “ராமசீதாவை பேசக் கொண்டுவந்தவர் வழக்கறிஞர் நளினி ஸ்ரீ என்பவர். அதனால், அவரை தொடர்புகொள்ளுங்கள்”என்றார். நாம், நளினி ஸ்ரீயை பல முறை தொடர்புகொண்டு, ராமசீதா அப்பல்லோவில் என்ன  மருத்துவராக…ஸ்பெஷலிஸ்டாக இருந்தார்? ஜெயலலிதா இறந்தபிறகுதான் அப்பல்லோவுக்கு கொண்டுவந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டபோது, “ராமசீதா மகளிர் நல மருத்துவர் என்பது நூறு சதவீதம் உண்மை. அவர் அப்பல்லோவில் டாக்டராக பணிபுரிந்ததற்கான அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவர், சம்பளப்பட்டியல்கூட எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் அப்பல்லோ மறுக்கமுடியாது. ஆனால், டாக்டர் ராமசீதாவுக்கு பலவிதங்களில் மிரட்டல்கள் வருவதால் அவரது செல்ஃபோன் நம்பரை ஸ்விட் ஆஃப் பண்ண சொல்லிவிட்டேன். அதனால், அவர் குறித்து  எதுவாக இருந்தாலும் என்னையே தொடர்புகொள்ளுங்கள்” என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்.
       
  நமக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. காரணம், டாக்டர் என்று சொல்லிக்கொள்ளும் ராமசீதா தொடர்ந்து ஜெ.தீபாபாவையும் அவரது கணவரையும் சந்திக்கவேண்டும் காத்துக்கொண்டிருக்கிறார் என்கிற தகவல்தான். ஜெ. தீபா தரப்பு சந்திக்க மறுத்துவிட்டதால் உடனே, ஓ.பி.எஸ்ஸை சந்திக்கப்போய்விட்டார் என்று அடுத்தத்தகவல் கிடைத்தது.  ஆக, ஜெயலலிதாவின் மரண தகவல் குறித்து பரபரப்பாக பேசி அரசியலில் ஏதோ ஒரு பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இறுதியாக, ஃபுட் புராடக்ட்ஸ் நடத்திக்கொண்டிருக்கும் ராமசீதாவின் கணவர் எல். சத்யநாராயணை தொடர்புகொண்டு விசாரித்தபோது, “ஆமாங்… அவங்க டாக்டர் இல்ல. எதுவா இருந்தாலும் வழக்கறிஞர் நளினி ஸ்ரீக்கிட்ட பேசிக்கோங்க. எங்கிட்ட எதுவும் டீட்டெய்ல் கேட்காதீங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை”என்று டென்ஷனானபடி ஃபோனை துண்டித்தார்.  
      
      இறுதியாக, நாம் அப்பல்லோ மருத்துவமனையின்  டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் டாக்டர் சத்யபாமாவிடம் கேட்டபோது அப்படியொரு மருத்துவரே எங்களிடம் வேலைபார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
      
    இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் தலைவர் டாக்டர் சடகோபனிடம் நாம் கேட்டபோது, “அலோபதி மருத்துவம் படிக்காமலேயே ஒருவர் அலோபதி மருத்துவர் என்று போர்டுவைத்துக்கொண்டு அலோபதி மருந்துகள் எழுதிக்கொடுத்து ஊசி போடுகிறார் என்று ஆதாரம் இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால், இப்படி பொதுவாக டாக்டர் என்று பேட்டிக்கொடுப்பவர்கள் உண்மையிலேயே போலி மருத்துவர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் சீட்டிங் வழக்கின் மூலம் காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்றார்.
      
     தான் ஒரு அப்பல்லோ மருத்துவர் என்றும் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் பொதுக்கூட்டங்களிலும் ஊடகங்களிலும் வெளிப்படையாக பேசிவருகிறார். அவர் பேசுவது உண்மையா? அவர் உண்மையிலேயே அப்பல்லோ மருத்துவர்தானா? உண்மையிலேயே மருத்துவர்தானா என்றுகூட தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெளனமாக இருப்பது ஏன்? என நமது நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த தகவலையும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொண்டு சென்றோம். 

இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை கமிஷனரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீசார், ’மருத்துவர் என்றும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் பொய்யாக விளம்பரப் படுத்திக்கொண்ட போலி டாக்டர் ராமசீதாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் நியூட்ரிசியன் படிப்பு படித்துவிட்டு உணவகங்களில் வேலை பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-மனோசெளந்தர்

கருத்துகள் இல்லை: