இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
இரண்டு பிரிவாக நின்று நாய்ச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின்
மென்சக்தியை (Soft power) உலகறியச் செய்த, நடுத்தர வர்க்கத்தினரின் கனவான
இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் குடுமிபிடிச் சண்டைகள் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சியையேப் பின்னுக்கு இழுத்துவிடும் எனப் பூச்சாண்டி
காட்டுகின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள்.
”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.
“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.
’சத்திரியர்கள்’ சண்டைக்கல்லவா போக வேண்டும். விசால் சிக்கா இராணுவத்தில் சேர்ந்து சியாச்சின் பனிமுகடுகளில் தனது சத்திரியப் பெருமையை நிலைநாட்டியிருக்க வேண்டும் – அல்லது குறைந்தபட்சம், லோக்கல் ரவுடியாக இருந்தாவது தனது போர்த் திறமைகளை நிரூபித்திருக்க வேண்டும். ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் தலைமைச்செயல் அலுவலருக்கும் பட்டாக்கத்திக்கும் என்ன சம்பந்தம் என ஐ.டி மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் நாராயணமூர்த்தி புலம்பிக் கொண்டிருக்கும் ”அறமதிப்பீடுகள்” அவருக்கு எப்போது நினைவுக்கு வந்தது? அமெரிக்க விசா பெறுவதற்காக பிராடுத்தனங்களில் ஈடுபட்டு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் நிலைக்கு 2013-ல் தள்ளப்பட்ட போது கூட அவருக்கு “அறமதிப்பீடுகள்” நினைவுக்கு வரவில்லை. அதே போல் விசால் சிக்கா தலைமைச்செயல் அலுவலராக நியமிக்கப்பட்டவுடன் ஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தப் போவதாக அறிவித்த போது, அந்நடவடிக்கையால் தமது ஊழியர்களில் 30 சதவீதம் பேர் வேலையிழக்கப் போகிறார்களே என்பதை நினைத்தும் கூட நாராயணமூர்த்திக்கு ”அறமதிப்பீடுகள்” குறித்த சொரணை உணர்ச்சி எழவில்லை.
நடுத்தரவர்க்கத்தின் கனவு இன்போசிஸ். சரியாகச் சொல்வதாக இருந்தால் உலகமயமாக்கலுக்கு முன் பொதுத்துறை வங்கி அல்லது அரசு வேலைகளை (இட ஒதுக்கீடு மற்றும் இடைநிலைச் சாதிகளின் அதிகரித்த ‘திறமையின்’ காரணமாக) ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்த ’அவாள்களின்’ புனித அக்கிரகாரமாக இன்போசிஸ் போற்றப்பட்டது.
எதார்த்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சல்லிசான விலையில் அத்துக்கூலிகளை அனுப்பி வைத்து கமிசனடிக்கும் ஆள்பிடி ஏஜெண்டு தொழிலில் (Body shop) தான் ஏராளமான வருமானத்தை வாரிக் குவித்தது இன்போசிஸ். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், ஹெச்1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்றும் இந்தியர்களால் வேலையிழப்புகளைச் சந்தித்த உள்ளூர் அமெரிக்கர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர்.
அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியேற்ற கொள்கைகள் விவாதப் பொருளாக இருந்த நிலையில், குடியேற்ற விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக திருத்தம் செய்ய வேண்டுமென அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தரகு வேலை(Lobbying) செய்வதற்காக இன்போசிஸ் உள்ளிட்ட எட்டு இந்திய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்துள்ளன.
லாபம் சம்பாதிக்க எந்த அளவுக்கும் இறங்கிச் சென்று சட்டவிதிகளை வளைக்கத் துணிந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தான் அரசியல்வாதிகளின் மேல் எங்கெல்லாம் ஊழல் முறைகேடு தொடர்பான புகார்கள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவதரித்து “நீதி நியாயங்களை” உபந்நியாசம் செய்பவர். “லஞ்சத்தை ஒழிக்க அதை சட்டப்பூர்வமாக்கி விடலாம்” (Why Infosys Chairman’s Advocacy of Legalizing Bribe-giving Is So Troubling) என்பது லஞ்ச ஊழலுக்கு எதிராக அன்னார் சண்டமாருதம் செய்த போது உதிர்த்த வேதவாக்குகளில் ஒன்றாகும்.
சமூகத்தில் ”திறமை இருப்பவர்கள் முன்னேறுவார்கள்” என்பது நாராயணமூர்த்தி பல்வேறு சந்தர்பங்களில் இளைஞர்களுக்கு சொன்ன வியாக்கியானம் – எனவே தங்களது நிறுவனத்தில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் தகுதி திறமையின் அடிப்படையிலேயே சேர்த்துக் கொள்ளப்படுவதாக சொல்லியிருக்கிறார். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த கடைநிலை ஊழியர் எவரையும் தலைமைச்செயல் அலுவலராகவோ நிர்வாகத்தின் உயர்ந்த பொறுப்புகளுக்கோ உயர்த்தப்படவில்லை. நாராயணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களால் துவங்கப்பட்ட இன்போசிஸ்-ன் உயர்நிர்வாகப் பொறுப்புகளில் சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்திருந்தனர்.
அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தி தனது வருமான ஆதாரத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போது பங்குச் சந்தை முதலீடுகளைக் கோருகின்றது இன்போசிஸ். தற்போது நாராயணமூர்த்தி தலைமையிலான ‘புரமோட்டர்களிடம்” சுமார் 15 சதவீத பங்குகள் உள்ளது – அதே நேரம், அந்நிய முதலீட்டு நிறுவனங்களிடமே இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.
இந்நிலையில் மாறி வரும் தொழில் மற்றும் பொருளாதாரச் சூழலில் அந்நிறுவனத்தின் உயர்நிர்வாகப் பொறுப்புகளுக்கு ”தகுதி திறமை” அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே நியமிக்க வேண்டுமென இன்போசிஸில் முதலீடு செய்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கின. 2004-ம் ஆண்டில் தான் முதன் முதலாக வெளிநபர் ஒருவரை தலைமைச்செயல் அலுவலராக நியமித்தது இன்போசிஸ்.
தற்போது வெடித்திருக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் பேசும் நாராயணமூர்த்தி ஆதரவாளர்கள், தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா மற்றும் சேர்மன் சேஷசாயி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஏராளமாக சம்பளம் வழங்கப்படுவது இன்போசிஸ் நிறுவனத்தின் அறமதிப்பீடுகளுக்கு எதிரானது என பொங்குகின்றனர். ஆப்பன்ஹெய்மர் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களோ லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய நிர்வாக குழு செயல்படுவதாகவும் அதன் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவு உண்டெனவும் அறிவித்துள்ளனர். மேலும் “தகுதி திறமை” கொண்டவர்களை பணிக்கமர்த்தி நிறுவனத்தின் வளர்ச்சியை உந்தித் தள்ள வேண்டுமெனில் சம்பள விசயத்தில் கஞ்சத்தனம் பார்க்க கூடாது என்றும் இத்தரப்பினர் முன்வைக்கின்றனர்.
இன்போசிஸில் நடந்து வரும் நாய்ச்சண்டையானது நீதி நியாயத்துக்கும் லாப வெறிக்கும் இடையிலானதாக நாராயணமூர்த்தியிடம் பரிசில் பெற்ற அவைப் புலவர்களான முதலாளித்துவ ஊடகங்கள் முழங்குகின்றன. இன்னொருபுறம், திறமையான மருமகளைப் பார்த்து பழைய மாமியாருக்குப் பொறாமை என முதலீட்டு நிறுவனங்களுக்கு பக்கவாத்திய கோஷ்டிகளாக செயல்படும் முதலாளித்துவ ஊடகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைந்து வருகின்றன.
ஆனால், இருதரப்பினருக்குமே நிர்வாகத்தைக் கைப்பற்றுவதைத் தாண்டி வேறு எந்த நோக்கமும் இல்லை. சண்டையின் போக்கில் இருதரப்பினருமே மாறி மாறி எதிர்தரப்பினரைக் குறித்த உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கார்ப்பரேட் புனித பசுவாக போற்றப்பட்ட இன்போசிஸின் சாயம் வெளுத்து வருவது ஒன்றே இதன் மூலம் நடந்திருக்கும் ஒரே நல்ல விசயம்.
– சாக்கியன்
மேலும் படிக்க: வினவு

- Tech cos spent million of dollars lobbying US Govt on immigration & other issues in 2016
- Infosys Chairman must quit for lapses: Former CFO V Balakrishnan
- Infosys, Cognizant, others form lobbying consortium
- With Infosys battle over ‘values’, yet another Indian corporate legend crashes to earth
- An open letter from OppenheimerFunds to the Infosys Board of directors
- Sikka, the Kshatriya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக