|
fake certificate fake fingers |
திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது போல கள்ள ஓட்டு போடுவோர்கள் அவர்களாகவே திருந்தா விட்டால் கள்ள ஓட்டுகளை தவிர்க்க முடியாது.
கள்ள ஓட்டுகள் போடுவோரை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கிறது.
ஓட்டு போடுவோர்களை அடையாளம் காண விரல்களில் அழியாத மை வைக்கும் நடை முறை ஆண்டு ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
இதன் மூலம் ஒருமுறை ஓட்டு போட்டவர்கள் திரும்ப ஓட்டு போட முடியாதபடி கள்ள ஓட்டு போடுவோர்களுக்கு தேர்தல் கமிஷன் செக் வைத்தது.
அதையும் முறியடிக்கும் விதமாக சமீபத்தில் வடமாநிலங்களில் நடந்த தேர்தலில்செயற்கை விரல் விற்பனை ஜோராக நடந்துள்ளது.
இந்த விரல் ஒரிஜினல் விரல் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விரல் மேல் உறை போன்று அணிந்து கொண்டு திருட்டு ஓட்டு போட்டுள்ளனர்.
தமிழகம் உட்பட தென் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தல் சமயங்களில் இது போன்ற செயற்கை விரல் விற்பனை ஜோராக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக