புதிய
முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானம்
கொண்டுவந்தார், சட்டசபைக்கு போகும்முன்பு, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்,
எம்.எல்.ஏ,களிடம், சபாநாயகரிடம் பார்த்துச் செய்யுங்க. பின்னால்,
பிரச்னைகள் வந்துடப்போகுது என்று ஆலோசனை சொல்லியுள்ளார். அப்போது,
துரைமுருகன் பேசுகையில், நமது தலைவர் சபாநாயகர் மீது அவ்வளவு பாசமும்,
மரியாதையும் வைத்துள்ளார். சபாநாயகர் தனபால் அவர்களை நியமித்ததும், தலைவர்
அழைத்து சொன்னார், தாழ்த்தபட்ட சமுதாயத்திலிருந்து ஒருவர் உயர் பதவிக்கு
வந்துள்ளார். அவருக்கு அந்த அம்மாவும் கையெடுத்து கும்பிடுராங்க, நாமும்
கும்பிடுகிறோம். அதனால் அவரை மரியாதையாக வைத்திருக்கனும் என்றார் தலைவர்
என்று கூறியுள்ளார். மேலும், அதை, நான் சட்டசபையில் சபாநாயகர் தனபாலிடம்
கூறியபோது, “கலைஞர் எனக்கும் தலைவர்தானே என்று உருகி போனார் என்று அவர்
கூறியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தலைவரைப் போலவே, புதல்வனும்
கவனமா இருக்கார் என்று பெருமைப்பட்டுக் கொண்டாராம் துரைமுருகன். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக