
பின்னா் கட்சி அலுவலகத்தில் வருங்கால முதல்வர் வாழ்க என்று சொன்னவர்களுக்கு ரூ. 3000ம் கொடுக்கப்பட்டதாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ரூ.1000 மும் வழங்கப்பட்டதாம். அடுத்த வாரத்திற்குள் தினகரன் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இவரே பொதுச் செயலாளராகவும் வர உள்ளார் என்றும் அவரின் அடிப்பொடிகள் பேசியதும் அந்த பகுதிகளில் உள்ளவர்களின் காதில் விழுந்துள்ளது. பதவி ஏற்றப்பின்பு பேட்டி அளித்தார் அப்போது அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்காது. குடும்பம் என்று கூறி யாரையும் ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட விடமாட்டேன் என்றும் கூறினார்.
சில தினங்களுக்கு முன்னா் தஞ்சையில் நடராஜன் அதிமுகவில் நடப்பது எங்கள் குடுபம் ஆட்சிதான் என்று கூறியதுக்கு இது பதில்போல உள்ளது. இதனை மனதில் வைத்துதான் திவாகரனும், நடராஜனும் இணைந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை வைத்து தினகரனுக்கு எதிராக பேச வைத்துள்ளனா் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபோல குடும்பச் சண்டை தொடா்ந்தால் அதிமுகவில் வெயிட்டை காட்ட கூட்டத்தை காட்டவேண்டும் என்பார்கள். அதற்கு கூட்டத்தை அழைத்து வருபவா்கள் காட்டில் பண மழைதான். இந்த நேரத்தில் தான் அவர்களிடம் பணத்தை வாங்க முடியும் என்று தொண்டா்கள் சந்தோசத்தில் உள்ளனா்.லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக