சென்னை: எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கொலையாளியான எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பழனி,
கலைவாணியின் மகள் ரித்திகா(3). அவரது உடல் திருவொற்றியூர் மணலி சாலையில்
உள்ள குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட
எண்ணூர் காவல்துறையினர், எதிர்வீட்டு பெண் ரேவதியை கைது செய்தனர். நகைக்காக
அவர்தான் சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர் அளித்த தகவலின்படி,
அடகு கடையில் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.;
சிறுமி ரித்திகா கடைசியாக எதிர்வீட்டில் வசிக்கும் ரேவதியின் வீட்டில்
இருந்துள்ளார். அங்கிருந்து தான் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலில் நகைகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள, பொதுமக்கள் மணலி விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. சமயம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக