சனி, 25 பிப்ரவரி, 2017

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் கூலி கொடுத்து சுமந்திரன் கொலை திட்டம் ? முறியடிப்பு!!

காவல்துறை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால்amp; ரி.ஐ.டி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் பற்றி மேற்கொண்ட விசாரணைகளில்   உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிச்சார்பு சக்திகளினால் தீட்டப்பட்ட சதித்திட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.< இப்போது  காவலில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) ஐந்து முன்னாள் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்று நபர்கள் எவ்வாறு சதித்திட்டம் தீட்டி, தூண்டிவிட்டு சுமந்திரனுக்கு எதிரான படுகொலைத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதைப் பற்றிய அதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த சதித்திட்டத்தை கையாண்ட வெளிநாட்டிலுள்ளவர்களுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள ஐந்து முன்னாள் புலிகளுக்கும் இடையேயான அனைத்து தொடர்பாடல்களும் தொலைபேசி மூலமாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளன.
புலம்பெயர்  புலிகளால் 14 இலட்சம்  ரூபாய்  பணம்கொடுத்து  சுமந்திரனை படுகொலை  செய்ய  முற்பட்ட  முயற்சி முறியடிப்பு!!  (பாகம-1) –   டி.பி.எஸ்.ஜெயராஜ்ஐந்து சந்தேக நபர்களும் பயன்படுத்திய தொலைபேசிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு மேலதிக பகுப்பாய்வு மற்றும் அழிக்கப்பட்டவைகளை மீளவும் பதிவு செய்வதற்காக அனுப்புவதற்கு நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பு தொடாபான வட்டாரங்கள் வழங்கிய தகவல்களின்படி, கொலை செய்யவிருந்தவர்கள் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து மூன்றுமுறை முயற்சித்துள்ளார்கள்.
அவர்களது   முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக நிரூபணம் ஆகியிருப்பதற்கு காரணம் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறி இடம்பெற்ற சூழ்நிலைகளே.
மூன்று முயற்சிகளும் இலக்குகளும்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்கு வைத்து வெடிபொருள் கருவிகளைப் பயன்படுத்தி அவர் பி – 402 எனும் சொர்ணப்பற்று – தாழையடி வீதியில் பயணம் செய்யும்போது   அவரைக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.
சந்தேக நபர்களைக் கைது செய்யும் வரை ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் இந்த மூன்று கொலை முயற்சிகளையும் பற்றி அறிந்திருக்கவில்லை.
முதலாவது திட்டமிட்ட முயற்சி நடைபெற்றது டிசம்பர் 12, 2016ல் திரு. சுமந்திரன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மருதங்கேணி என்கிற இடத்தில் நடைபெறவிருந்த ஒரு கலாச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது.
அந்த திட்டம் தோல்வி அடைந்ததுக்கு காரணம், பாராளுமன்ற உறுப்பினர் தன்னுடைய வாகனத்தில் பயணம் செய்யாமல் வட மாகாணசபை ரி.என்.ஏ உறுப்பினர்   கேசவன் சயந்தனின் வாகனத்தில் பயணம் செய்தமையே.
இரண்டாவது முயற்சி இடம்பெற இருந்தது 26 டிசம்பர், 2016ல். திரு. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறார் என்பதை சந்தேக நபர்கள் டிசம்பர் 24ம் திகதியே தெரிந்து கொண்டிருந்தார்கள்.
அவர் மருதங்கேணி – தாழையடியில் நடைபெறும் சுனாமி ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் டிசம்பர் 26ல் கலந்து கொள்ள வருவார் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
எனினும் சுமந்திரன் தனது குடும்பத்தினருடன் நத்தார் பண்டிகையின்போது வீட்டில் இருப்பதற்காக டிசம்பர் 25ந் திகதியே கொழும்பு திரும்பிவிட்டார். இதனால் சந்தேக நபர்கள் எதிர்பார்த்ததைப் போல சுமந்திரன் சுனாமி நிகழ்வுகளுக்குச் செல்லவில்லை.
மூன்றாவது முயற்சி 2017 ஜனவரி 13ல் நடைபெற இருந்தது, மருதங்கேணியில் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது தொடர்பாக இடம்பெறும் ஒரு கருத்தரங்கில் சுமந்திரன் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் சுமந்திரன் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் தனது திட்டத்தை,  சில எதிர்பாராத காரணங்களால் கடைசி நிமிடத்தில் இரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். ஆதலால் சந்தேகநபர்கள் தாங்கள் கற்பனை செய்தபடி தங்கள் சதித்திட்டத்தை முன்கொண்டு செல்ல முடியவில்லை.
ரூபா 800,000 மற்றும் 600,000 ஆகிய இரண்டு கொடுப்பனவுகள்
பாதுகாப்பு தொடர்பான தகவலறிந்த வட்டாரம் யூகிப்பதன்படி, சுமந்திரனுக்கு எதிரான படுகொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக   ஐந்து முன்னாள் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த  வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்களும் நோர்வேயை தளமாகக் கொண்டியங்கும்   பேரின்பநாயகம்    சிவபரன் என்கிற   நெடியவனின் தலைமையில்  இயங்கும்   புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்குச் சொந்தமானவர்கள் ஆவர்.
அவர்கள் பிரான்சை சேர்ந்த ‘மாறன்’ அவுஸ்திரேலியாவில் உள்ள ‘வெற்றி’ மற்றும் மலேசியாவில் உள்ள ‘அமுதன்’ என்பவராவர். படுகொலையை  எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றிய விரிவான வழிகள் வெற்றி மூலம் ஆரம்பம் முதல் ஒழுங்காக வழங்கப்பட்டு வந்துள்ளன.
பிரான்சிலுள்ள மாறன் பணத்தை விநியோகித்துள்ளார். காவல்துறை இதுவரை மாறனினால் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்ட 800,000 மற்றும் 600,000 ஆகிய இரண்டு கொடுப்பனவுகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
‘யாழ் அமுதன்’ என்றும் அறியப்படும் அமுதன் என்பவர்தான் இந்த சதியின் பின்னாலுள்ள சூத்திரதாரி என்று சொல்லப்படுகிறது.
1-43  புலம்பெயர்  புலிகளால் 14 இலட்சம்  ரூபாய்  பணம்கொடுத்து  சுமந்திரனை படுகொலை  செய்ய  முற்பட்ட  முயற்சி முறியடிப்பு!!  (பாகம-1) -   டி.பி.எஸ்.ஜெயராஜ் 1 43இந்த விஷயங்கள் யாவற்றையும் ஒருங்கிணைக்கும் ஒட்டு மொத்த பொறுப்பும் இவருடையது.
அமுதன் மலேசியாவை தளமாகக் கொண்டிருந்த போதும் ஒரு பிரேசில் சிம் அட்டையையே தனது தொலைபேசிக்கு பயன்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் ரி.ஐ.டி யினர், அமுதன் என்கிற புனைபெயரைக் கொண்டவர் எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு செயற்பாட்டாளரான  சிரஞ்சீவி மாஸ்ரர் என்ற இயக்கப் பெயர் கொண்ட நபர்தான் என்றும், அவர் தெற்காசிய நாடொன்றில்தான் உள்ளார் எனவும் சந்தேகப் பட்டார்கள்.
அமுதனுடனான தொலைபேசி உரையாடலில் ஒரு குரல் பரீட்சை மேற்கொண்டபோது, அமுதன், சிரஞ்சீவி இல்லை என்பது வெளிப்பட்டது.  மலேசிய  அதிகாரிகள்   அமுதன் இப்போது மலேசியாவில் இல்லை என்று எண்ணுகிறார்கள்.
கொலை முயற்சிகளுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் புலிகளான ஐந்து சந்தேக நபர்களின் வாக்குமூலங்களையும் ரி.ஐ.டி யினர் பதிவு செய்துள்ளார்கள்.
ஐவரில் நால்வர்  முதலில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்பாக ஆஜர் செய்யப்பட்டு பிஸ்கால் காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அவர்கள் அனுராதபுர சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வழக்கு அடுத்ததாக 2017, ஜனவரி 30ல் மீண்டும் விசாரிக்கப்பட்டது. அன்றைய தினம் மற்றொரு நபரின் பெயரும் சந்தேக நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஐந்து பேரும் பெப்ரவரி 13 ந் திகதி வரை சிறை வைக்கப்பட்டார்கள். வழக்கு திரும்பவும் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது   ஐந்து சந்தேக நபர்களையும் பெ;ரவரி 27 வரை மீண்டும் சிறை வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
காவல்துறையினர் நீதி மன்றத்திடம் விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை, மற்றும் மேலதிக தகவல்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப் படுவதாக தெரிவித்தார்கள்.
வவுனியாவில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்திய போதிலும், நம்பிக்கையாக அறிய முடிவது ரி.ஐ.டி பணிப்பாளர்  டி.ஐ.ஜி நாலக டீ சில்வா அவர்கள் தானே முன்னின்று   இந்த வழக்கில் தனது அதிகாரிகளை இயக்கி வருகிறார் என்று.
இந்த விடயத்தில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகளைப்பற்றி அதிக விபரங்களை கண்டுபிடிப்பதில் ரி.ஐ.டி யினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனா.
ஸ்ரீலங்காவிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் கூட சுமந்திரன் கொல்லப்படுவதற்கான முயற்சியில் ஒரு பங்கினை வகித்திருக்கலாம் என்றும் கூட சந்தேகம் உள்ளது.
விசாரணைகள் முடிவடைந்ததும் ஒரு குற்றச்சாட்டு பத்திரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழுத் தலைவர் மாஸ்ரர் என்கிற குலேந்திரன்
முதலாவது சந்தேக நபரான மாஸ்ரர் என்கிற காராளசிங்கம் குலேந்திரன் தான் முன்னாள் புலிகள் குழுவின் பணியான சுமந்திரனை கொலை செய்யும் செயல்பாட்டுக்கான கொலைகார குழுத் தலைவனாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.
அவர் எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு மூத்த தலைவர், அத்துடன் போர் நடைபெற்றபோது எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டில் இருந்த சமயம், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இவர் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சி பெறும் எல்.ரீ.ரீ.ஈயினர் இவரை மாஸ்ரர் எனப் பெயரிட்டு அழைத்ததால் மற்றைய அங்கத்தவர்களாலும் அப்படி அழைக்கப்பட்டார், குலேந்திரனை   இப்போதும் சிலர் மாஸ்ரர் என்றே அழைக்கிறார்கள்.
சந்தேக நபர்களாக மாஸ்ரருடன் சிறை வைக்கப் பட்டிருந்த பல முன்னாள் புலிகள் மாஸ்ரரினால் பயிற்றப்பட்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
37 வயதான குலேந்திரன் மாஸ்ரர் 43/1,திருவையாறு, கிளிநொச்சி எனும் விலாசத்தில் வசிப்பவராவார். அவர் யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு நெருக்கமாக துணை புரிபவர் என அறியப்பட்டவர், சிறிதரனின் அரசியல் தளம் கிளிநொச்சி தேர்தல் பிரிவு ஆகும்.
குலேந்திரன் கிளிநொச்சியிலுள்ள லங்கா ஓரியன்ட் லீசிங் நிறுவனத்தில் (எல்.ஓ.எஸ்.எல்) மூத்த நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
இந்த எல்.ஓ.எஸ்.எல் நிறுவனம் கடன், குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு போன்றவற்றை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. குலேந்திரன் கடமையின் நிமித்தம் வடக்கு முழுவதும் பயணம் செய்யக் கூடியவராக இருந்தார். காவல்துறையினரால் கிளிநொச்சியில் வைத்து ஒரு சக்தி வாய்ந்த கண்ணிவெடி குலேந்திரனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
சிறையில் உள்ள இரண்டாவது சந்தேக நபர் ஞானசேகரலிங்கம் ராஜ்மதன் என்கிற வாசுதேவன் ராஜ்மதன், இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் உள்ள நடுப்பிரப்பான்திடல் என்கிற இடத்தை சேர்ந்தவர்.
ராஜ்மதனுக்கு திருகோணமலையில் மனைவி மக்கள் இருந்தபோதும் அவர் தொடர்ச்சியாக பல மாதங்கள் வடக்கில் தங்கியிருந்து வடக்கு பிரதான நிலப்பகுதியிலுள்ள கிளிநொச்சிக்கும் மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள தாளையடிக்கும் இடையே சுற்றி வருவார்.
கிளிநொச்சியில் ராஜ்மதன் தங்கியிருந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் கருவி மற்றும் வெடிமருந்துகளைக் கண்டெடுத்து உள்ளார்கள்.
மூன்றாவது சந்தேகநபர் முருகையா தவேந்திரன், இவரும்கூட கிளிநொச்சியை சேர்ந்தவர். தவேந்திரன் எல்.ரீ.ரீ.ஈயில் தீவிரமாகச் செயற்பட்ட காலத்தில் ஒரு வெடிவிபத்தில் தனது ஒரு கையை இழந்துவிட்டார், கிநொச்சி திருவையாற்றில் 3ம் கட்டைக்கு அருகாமையில் உள்ள வில்சன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
32 வயதான தவேந்திரன், தவம் எனவும் அழைக்கப்படுகிறார். தவம் 2009 மே, 18ல் ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தார். அவர் 10 மாதங்களாக நெலுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப் பட்டதின் பின்னர் 2010 மார்ச் 7ல் விடுதலையானார்.
இந்தியாவுக்கான இரகசிய கடற்பயணம்
நாலாவது சந்தேகநபர் விஜயன் என அழைக்கப்படும் வேலாயுதம் விஜயகுமார். விஜயன் 19 ஜனவரி 2017ல் கைது செய்யப்பட்டார், ஆனால் 20 ஜனவரி   2017ல் ஏனைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக்கப் படவில்லை.
வழக்கு மீண்டும் 30 ஜனவரி 2017ல் விசாரிக்கப் பட்டபோது ஏனையவர்களுடன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் பட்டார். விஜயன் என்கிற விஜயகுமார் மன்னாரிலுள்ள வேட்டையான்முறிப்பைச் சேர்ந்தவர்.
குலேந்திரன் வசமிருந்த சக்திவாய்ந்த நிலக்கண்ணிவெடி விஜயனிடம் இருந்தே மாஸ்ரருக்கு வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விசாரணைகள் வெளிப்படுத்தியிருப்பது, முன்பு விஜயன், எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபர்கள்   பல்வேறு   குற்றச்செயல்களுக்காக இந்தியா செல்ல விரும்பும் போதெல்லாம்  அவர்களுக்கு   இரகசிய கடற்பயணத்தை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருந்தார் என்று.
படுகொலை செய்த பிறகு அவரது சக சந்தேகநபர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு விஜயன் உதவி செய்திருக்க முடியும் என புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
ஐந்தாவது சந்தேகநபர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கு   கடற்கரைப் பிரதேசமான தாழையடியை சேர்ந்தவர்.
இவர் புனர்வாழ்வு பெற்ற ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர், இப்போது ஒரு முச்சக்கர வண்டியோட்டி வருகிறார். இவரது பெயர் மரியநாயகம் லூயிஸ் அஜந்தன். அஜந்தனும் ஜனா என்கிற புனைபெயரால் அழைக்கப்பட்டு வருகிறார்.
அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்தபோது அவரது இயக்கப்பெயர் கடலவன் என்பதாகும். குலேந்திரன் மாஸ்ரர், மரியநாயகம் அஜந்தன் வாடகை கொள்வனவு   திட்டத்தின் கீழ்   ஒரு முச்சக்கர வண்டியை வாங்குவதற்கு பண உதவி செய்திருக்கிறார் என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அஜந்தன் தனது வாகனத்தை தாழையடி, மருதங்கேணி,  செம்பியன்பற்று மற்றும் மாமுனை பிரதேசங்களில் ஓட்டி வந்துள்ளார்.
இந்த பிரதேசங்கள் எல்லாவற்றிலும் அவர் காலவரையின்றி தங்கியிருந்துள்ளதினால், காவல்துறையினர் தங்களது பி அறிக்கையில் ரி.ஐ.டி யு ரி.ஐ.டி யும் அஜந்தன் வசமிருந்து உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் கருவி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளார்கள்.
இந்த வழக்கில் ஒரு சுவராஸ்யமான அம்சமாக, இந்த வழக்கில் குற்றங்கள் எதுவும் அரக்கத் தனமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் (பி.ரி.ஏ)கீழ் பதிவு செய்யப்படவில்லை.
அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத விரோத சட்டத்தை மாற்றீடு செய்ய உள்ளதால், அது பி.ரி.ஏ யினை இதில் சேர்க்க விரும்பவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஒரு முன்னணி சட்டத்தரணியும் கூட, அவர் இந்த பி.ரி.ஏ யினை கடுமையாக எதிர்த்து வருபவர்.
இதன் காரணமாக   இந்த வழக்கில் பி.ரி.ஏ யினை அகற்றும் முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் கூட அனுமதி அளித்துள்ளார். இதனால் சந்தேக நபர்கள் விசாரணைக்காக பி.ரி.ஏ யின் கீழ் காலவரையின்றி தடுத்து வைக்கப்படவில்லை.
அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு பிஸ்கால் சட்டப்படி சிறை வைக்கப்படுகிறார்கள். ரி.ஐ.டி யினருக்கு சந்தேக நபர்களை அணுகுவதற்கு வழி கிடையாது,  அவர்களிடமிருந்து மேலதிக   வாக்குமூலங்களைப் பெறவேண்டுமாயின் காவல்துறையினர் அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெறவேண்டும்.
அதற்கும் மேலதிகமாக காவல்துறையினர், சிறைக் காவலரின்; முன்பாக வைத்தே சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியும்.
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
இந்த படுகொலைச் சதி வழக்கு (பி85/17), கிளிநொச்சி நீதிமன்றில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் பெப்ரவரி 13ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, படுகொலைச் சதி தொடர்பான அதிக தகவல்கள் அடங்கிய மேலும் ஒரு பிற்சேர்க்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
சந்தேகநபர்களை விசாரணையுடன் தொடர்புபட்ட சில குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அது தொடர்பான உண்மைகளை   உறுதிப்படுத்திய பின்னர்  அவர்களது வாக்கு மூலங்களைப் பதிவு செய்வதற்கு காவல்துறை நீதிமன்றத்தின் அனுமதியை கோரியது.
இதை குலேந்திரன்,தவேந்திரன், விஜயகுமார், மற்றும் அஜந்தன் ஆகியோர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
ராஜ்மதன் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் அவருடன் ஆலோசனை நடத்தியதின் பின்னர், தனது கட்சிக்காரர் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர் திரு. ஆனந்தராஜா காவல்துறையினர் கணேசலிங்கம் ராஜ்மதனுடன் அந்த இடங்களுக்கு துணையாகச் சென்று மேலதிக விசாரணைகளை பெப்ரவரி மாதம் 20,21,மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார்.
காவல்துறையினர்   ராஜ்மதனை வடக்கில் மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் அத்துடன் கிழக்கில் உள்ள திருகோணமலை மாவட்டத்துக்கும் அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையாக ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டிவிடுவதை இலக்காக கொண்டு செயற்படும் புலம்பெயர் புலிகளின் செயற்பாட்டில் பெரியளவு திருகோணமலை இணைப்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தவிரவும் ராஜ்மதனின் குடும்பம் திருகோணமலை தம்பலகாமத்தில் உள்ளது. காவல்துறை மேலும், அனுராதபுரம் சிறையில் உள்ள மற்றைய நான்கு சந்தேக நபர்களின் மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு அனுமதி தரும்படி நீதிமன்றத்திடம் வேண்டினார்கள்.
திரு. ஆனந்தராஜா அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, காவல்துறையினர், குலேந்திரன்,  தவேந்திரன்,விஜயகுமார் மற்றும் அஜந்தன் ஆகியோரிடம் 14,15,மற்றும 16ம் திகதிகளில் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார். இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் வழக்கு மீண்டும் பெப்ரவரி 27ல்விசாரணை செய்யப்படும்.
(தொடரும்)
-டி.பி.எஸ்.ஜெயராஜ்-  இலக்கிய இன்போ

கருத்துகள் இல்லை: