வியாழன், 23 பிப்ரவரி, 2017

மனிதர்கள் வசிக்கக்கூடிய 3 கோளங்கள் உட்பட 7 கோளங்கள் கொண்ட புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது


NASA just announced that not one, but seven Earth-sized planets have been found orbiting the habitable or 'temperate zone' of a star just 39 light-years away.
வாஷிங்டன்: நாசா அறிவிக்கும் புதிய தகவல் எதைப்பற்றி என்ற விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலித்த நிலையில், அதற்கான விடையை நீங்களும் தெரிந்து கொள்ளலாம். விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள். சூரிய குடும்பத்தில் புதிய 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர். ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாசாவின் புதிய அறிவிப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை. இதை பல கோடி பேர் நேரலையில் பார்த்தனர். tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: