கோவை மாவட்டத்தில் அமைச்சர், சட்டப் பேரவை
உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், கோவையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அலுவலகம், சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பொள்ளாச்சியில் உள்ள சட்டப் பேரவை தலைவர் தனபாலின் வீடு மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களின் அலுவலகம், வீடுகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தினமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக