புதன், 22 பிப்ரவரி, 2017

ஜாக்கி வாசுதேவுக்கு ... விகடன் குமுதம் மற்றும் விபசார ஊடகங்கள்

உனக்கு காடு .. எனக்கு நாடு .. ஊரை அடிச்சு உலைல... 
Karundhel Rajesh ஜக்கி வாசுதேவின் மேல் உள்ள வழக்குகள் பற்றி, அவர் காட்டை அழித்துகொண்டிருப்பது பற்றி, யானைகளின் பாதையை அடியோடு மறித்து ஆசிரமம் கட்டிக்கொண்டிருப்பது பற்றி விகடன், குமுதம் ஆகிய பத்திரிக்கைகளில் விரிவான கட்டுரைகள் வரவேண்டும். இந்தப் பத்திரிக்கைகள்தான் ஜக்கியை வளர்த்துவிட்டன. எழுத்தாளர்கள் சுபா, ஜக்கியை மானே தேனே பொன்மானே என்றெல்லாம் போற்றிப்பாடி இவற்றில்தான் பில்டப் கொடுத்தனர்.
இப்போது இணையமெங்கும் ஜக்கியை எதிர்த்து ஏராளமான நண்பர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர் மேல் உள்ள வழக்குகள் பட்டியலே ஆதாரபூர்வமாக இங்கு உள்ளது. இவற்றையெல்லாம் விகடனும் குமுதமும் விரிவாக அலசி ஆராய்ந்து, ஜக்கியின் விளம்பரங்களை வெளியிடுவதை அடியோடு நிறுத்திவிட்டு, புலனாய்வுக் கட்டுரைகள் வெளியிடவேண்டும். சவுக்கு ஷங்கரின் கட்டுரைகளையேகூட மறுபதிப்பு செய்யலாம். அதேபோல் விஜய்டிவி ஜக்கி பற்றிப் புலனாய்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். ஜக்கியை வளர்த்ததில் விஜய்டிவிக்கும் பெரும்பங்கு உண்டு.

இதெல்லாம் எதுவுமே இதுவரை விரிவாக எந்த மீடியாவிலும் வரவில்லை. வரவில்லை என்பதே அவர்களின் நேர்மையைச் சந்தேகிக்கச்செய்கிறது. ஜக்கியை ஆவேசமாக வளர்த்துவிடுவதில் இருந்த 'நேர்மை', இப்போது அவரது தகிடுதத்தங்களைப் பதிப்ப்பிப்பதில் இல்லை என்பதே இத்தகைய மீடியாக்களின் so called 'நடுநிலையை' ஊரறிய அம்பலம் ஆக்குகிறது. இதுதானே ஒரு பத்திரிக்கையின் கடமை? பிரதமரே வரும்போது, ஆசிரமத்தின் பிரச்னைகளை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டாமா? இதைக்கூடச் செய்ய முடியாமல் பம்மிக்கொண்டு பின் என்ன பிரபல மீடியா?  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: