மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை
பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என
தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும்
கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர்
மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில்
சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப்
பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள்
அந்தக் கூட்டத்தில் உள்ளன. அந்த யானைகளை ஜக்கியின் ஆட்கள்
விரட்டியடிக்கிறார். உயிர்பயத்தில் அவை வேகமாகக் கடந்து செல்கின்றன.
சூழலியலாளர் ராமமூர்த்தியின் முழுபதிவும் இங்கே:
நமக்கு(மனிதர்களுக்கு)முன்பாகவே இந்த மண்ணில் தோன்றியவை மற்ற உயிரினங்கள் தார்மீக ரீதியில் பார்த்தால் நம்மைவிட அவற்றிற்குதான் இந்தபூமியின் மீதான உரிமை மிக அதிகம் இதை மனித மனம் ஒத்துக்கொள்ளுமா ?…மற்ற உயிரினங்கள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரிந்திருந்தால் இந்த பூமியில் மனித இனம் பூண்டோடு என்றோ அழிக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை….
அந்த வகையில் அதன் காட்டிலேயே உட்கார்ந்துகொண்டு உலகை அமைதிப் படுத்துகிறேன்னு சொல்லிட்டு விலங்குகளை அமைதியில்லாம செய் இந்தக் காணொளியில் காணுங்கள் இதைப்பார்த்து உங்கள் மனம் மகிழ்ச்சிக்குண்டானால் நீங்கள் அங்கே போய் தியானம் செய்ய முழுத்தகுதி பெற்றவர்களாவீர்கள்… மாறாக மனம் பதைபதைத்தால் ஆசிரமத்தின் ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல் கொடுங்கள்….
சாமிக்கு முன்னாடி அனைத்துயிர்களும் சமம் என்றால் இந்த காட்டுவிலங்குகள்மீது ஏன் இந்த தாக்குதல்கள்? சாமிக்கு மனித உயிர் மட்டும் தான் உயிரென்றால் அந்த சாமியே எமக்கு தேவையில்லை….காட்டுக்குள்ள மரத்தை வெட்டியெ
றிந்துவிட்டு நாட்டிற்குள்ளே மரத்தை வளர்த்தால் செய்கிற குற்றம் சரியாகிவிடுமா ?
இதுபற்றி பேசும்போது ஒருவர் என்னிடம் சொன்னார் அது பட்டாபூமி அங்கு ஆசிரமம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு விவசாயம் செய்யப்பட்டு வந்ததாம் அப்படியே பார்த்தால்கூட அது வனக்காடாகவே இருக்க வேண்டாம்…தமிழ்நாட்டில் நீராதாரத்தோடு இருக்கும் சொற்பமான வளமான நிலப்பரப்பு எங்கும் ஆசிரமத்தை அமைத்துவிட்டால், பசிக்கும் வயிற்றுக்கு, நாலு மந்திரத்தை உச்சரித்து, சின்னதாக ஒரு தியானத்தை செய்தால் போதுமா?…
காட்டைக்கெடுப்பவன் சூழலைச் சிதைப்பவன் எந்தமதமானாலும் அவன் மனிதகுலத்திற்கு தீங்கை உண்டாக்குபவனே அது காருண்யாவாக இருந்தாலும் ஈஷாவாக இருந்தாலும் எல்லோருமே இயற்கை சூழலுக்கான எதிரிகள்தான்…
இங்கு குடிக்கவே நீரற்ற நிலை…நீரில்லாமல் பாசனப்பரப்பு வெகுவாக சுருங்கிவிட்டது,ஏதோ பச்சையா கொஞ்சம் நீர் இருக்கிற மலையடிவார நிலங்களை ஏதோவது ஒரு மதசாமியாரிடம் கொடுத்துவிட்டு,புதிது புதிதாய் இறக்குமதி செய்யும் பக்தர்களைப் பார்த்து வாய்பிளந்து நிற்கும் தமிழன்தான் ஊருக்கு இளைச்சவன்….ஏமாளி….”thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக