டீக்கடை பெஞ்ச் - 1970
ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை
காட்டூர் பி3 காவல் நிலையத்தில் ஒரு லோக்கல் கிரிமினல் மீது வழக்கு
பதியப்படுகிறது...
பின்னர், அவனது மனைவியை அவனே கொலை செய்ததாக ஒரு புகார் மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்டு, அது விசாரிக்காமலே நிலுவையில் வைக்கபடுகிறது.. அப்படியே ஒரு 20 வருடம் கழித்து...அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வருகை தருகிறார்... இதுவல்லவோ ஜனநாயகம்...
ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) கோவை வருகிறார். தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கோவை வருகிறார். கோவைக்கு முக்கிய பிரமுகர்கள் வருவதையொட்டி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விழா நடைபெறும் ஈஷா யோகா மையப்பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டுவரப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நேற்று காலை கோவை வந்தனர். ஈஷா யோகா மையத்துக்கு சென்ற அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தால், விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தனர். இதற்காக குண்டு துளைக்காத கார்கள் கோவையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் 60 பேர் கோவை வந்தனர். கோவை விமான நிலையம், விழா நடைபெறும் ஈஷா யோகா மையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டர் வரும் வழியில் உள்ள உயரமான கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். விழா நடைபெறும் இடம் மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதாலும், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி மேற்பார்வையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நூற்றுக்கும் மேலானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பு பகுதிகள், மலைக்கிராமங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையின்போது எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பலமுறை சென்று நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை சரியானபடி அமைந்ததாக பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தன நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக