
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் ரஜினி, விஜய், சூர்யா. இவர்கள் படங்கள் என்றாலே வசூல் பட்டையை கிளப்பும்.
சமீப காலமாக இவர்களுடைய படங்கள் அனைத்தும் ரூ 100 கோடி, ரூ 200 கோடி என கூறப்பட்டு வருகின்றது.
ஆனால், உண்மையாகவே கபாலி, பைரவா, சிங்கம்3 ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கலாம்.
படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் தானாம், இதனால் இப்படங்களின் நஷ்ட ஈடு சரியாக கொடுக்கவில்லை என்றால் இவர்களுடைய படங்களை இனி புறக்கணிப்போம் என சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்களாம்.
இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும், ஹீரோக்களின் மார்க்கெட்டை ஏற்றுவதற்காகவே ரூ. 100 கோடி வசூல் எல்லாம் கிளப்பிவிடுவதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
ஆனால், எந்த படத்தை எடுத்தாலும் தோல்வி, தோல்வி என விநியோகஸ்தர்கள் சொல்வது தயாரிப்பாளர்களுக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை இரண்டு தரப்பினர்களும் வெளிப்படையாக அறிவித்தால் தான் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக