தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி 24, 05:30 AM
புதுடெல்லி
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியிடம் மனு
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அப்போது, அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–
ரத்துசெய்ய வேண்டும்
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்துவிட்டது.
ஆகவே, ‘‘அரசியல் சட்டம்’’ மற்றும் ‘‘பாராளுமன்ற ஜனநாயகம்’’ ‘‘தமிழக அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு’’ ஆகிய உயர்ந்த தத்துவங்களை, கொள்கைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 18–2–2017 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு முறையில், தமிழக சட்டமன்றத்தில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, தாங்கள் (ஜனாதிபதி), தமிழக பொறுப்பு கவர்னருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சட்டசபையில் நடந்த சம்பவங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் பேட்டி சந்திப்பு முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தமிழக சட்டசபையில் வாக்கெடுப்பு என்ற பெயரில் மிகப்பெரிய வன்முறை சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வெளியில் இருந்து காவல்துறை அதிகாரிகளை வரவழைத்து 89 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் வெளியே தூக்கிப்போட்ட கொடுமைகள், அவையை நடத்திய சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, சட்ட விரோதமாக நடந்து கொண்டார் என்பதையெல்லாம் ஜனாதிபதியிடம் நாங்கள் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடந்த முன்மாதிரிகளை எல்லாம் சொல்லி, அந்த வகையில் வாக்கெடுப்பு நடத்த நாங்கள் குரல் எழுப்பியும் பலன் அளிக்காததையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம். மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறோம். நீதி விசாரணை காலியான மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றதைப் போல, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு அவர்களே வாக்குகளை போட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, அந்த வாக்கெடுப்பை உடனடியாக ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு மனு அளித்து இருக்கிறோம். ஜனாதிபதி அதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று விதிமுறையில் இல்லை. சபாநாயகர் விருப்பப்படி நடத்தலாம் என்று இருக்கிறது. எங்களது டெல்லி பயணம் தோல்வியில் முடியும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகன் தீபக் சொல்லியிருக்கிறார். உண்மை இப்போதுதான் வெளியே வர தொடங்கியிருக்கிறது. அதைப்போல ஓ.பன்னீர்செல்வமும் தனது பதவி பறிக்கப்பட்டவுடன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சிகிச்சை விவரங்களை கேட்டோம். அவர் மறைந்தபிறகு மரணத்தில் மர்மம் இருக்கிறது, எனவே விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறோம். எடப்பாடி கே.பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 கையெழுத்துகளைபோட்டார். 6–வது கையெழுத்தாக ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கையெழுத்திட்டு இருந்தால் பாராட்டி இருப்போம். ஆனால் கையெழுத்து இடவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை அராஜகத்தை, அத்துமீறி நடப்பதை என்றைக்குமே விரும்பியது இல்லை. சட்டசபையில் எந்த அ.தி.மு.க. உறுப்பினரும் தாக்கப்படவில்லை. நான் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள்தான் தாக்கப்பட்டோம். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அதை நீக்கி விடாமல் கொடுத்தால் ஆதாரம் கிடைக்கும். ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே, இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். காலியான மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றதைப் போல, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு அவர்களே வாக்குகளை போட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, அந்த வாக்கெடுப்பை உடனடியாக ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு மனு அளித்து இருக்கிறோம். ஜனாதிபதி அதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று விதிமுறையில் இல்லை. சபாநாயகர் விருப்பப்படி நடத்தலாம் என்று இருக்கிறது. எங்களது டெல்லி பயணம் தோல்வியில் முடியும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகன் தீபக் சொல்லியிருக்கிறார். உண்மை இப்போதுதான் வெளியே வர தொடங்கியிருக்கிறது. அதைப்போல ஓ.பன்னீர்செல்வமும் தனது பதவி பறிக்கப்பட்டவுடன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சிகிச்சை விவரங்களை கேட்டோம். அவர் மறைந்தபிறகு மரணத்தில் மர்மம் இருக்கிறது, எனவே விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
எடப்பாடி கே.பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 கையெழுத்துகளைபோட்டார். 6–வது கையெழுத்தாக ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கையெழுத்திட்டு இருந்தால் பாராட்டி இருப்போம். ஆனால் கையெழுத்து இடவில்லை.
தி.மு.க.வை பொறுத்தவரை அராஜகத்தை, அத்துமீறி நடப்பதை என்றைக்குமே விரும்பியது இல்லை. சட்டசபையில் எந்த அ.தி.மு.க. உறுப்பினரும் தாக்கப்படவில்லை. நான் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள்தான் தாக்கப்பட்டோம். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அதை நீக்கி விடாமல் கொடுத்தால் ஆதாரம் கிடைக்கும். ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே, இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக