புதன், 22 பிப்ரவரி, 2017

சசிகலா பன்னீர்செல்வம் அணி ஒன்று சேரும் வாய்ப்பு அதிகம்... பொதுவான ஒருவரை பொதுசெயலாளர் ..

பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் :  பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்   கோவை: 'அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக உள்ள சசிகலாவை நீக்கி விட்டு, பொதுவான நபரை தேர்வு செய்ய வேண்டும்' என, கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிருப்தி : அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக சசிகலாவை, கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவித்தனர்; இதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. பொதுமக்கள் மத்தியிலும்அதிருப்தியே நிலவுகிறது.கட்சி < விதிகளை மீறி துணை பொதுச் செயலராக, தினகரனை நியமித்ததை கட்சியினரும் விரும்பவில்லை.
கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது: சசிகலாசிறையில் உள்ளார்.இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். சிறையில் இருந்தபடி, கட்சி பணியாற்று வது சாத்தியமற்றது. துணை செயலர் பதவி, கட்சி விதிமுறைக்கு முரணானது.


பன்னீர்செல்வம் அணி, இடைப்பாடி அணி என, இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டால் கட்சி பிளவுபட்டு விடும்; இரட்டை இலை சின்னமும் முடங்கி விடும். விரைவில்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டி யிருப்பதால், மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை போக்க கட்சியினரை ஒருங்கிணைக்க வேண்டும்.

ஜெ., இருந்த இடத்தில், பன்னீர்செல்வமோ, பழனி சாமியோ யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.  எங்களது கருத்துகட்சியை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல ஒருவர் தேவை. பொது செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, பொதுவான நபரை நியமிக்க வேண்டும். அவரது வழிகாட்டுதலில் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். எங்களது கருத்தை, கட்சி நிர்வாகி களிடம் தெரிவித்துஇருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். tamiloneindia

கருத்துகள் இல்லை: