முன்னாள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக
பொதுச்செயலாளர் சசிகலாதான் முடிவு செய்ய முடியும் என அதிமுக எம்.பி.
தம்பித்துரை தெரிவித்துள்ளார்
தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பித்துரை நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது,
தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கியத் திட்டங்களை வரும் நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இந்தக்கால கட்டத்தில் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழகம் வளர்ச்சியை எட்டும்.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் திமுகவினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டபோது, பன்னீர்செல்வமும் ஆதரவு கொடுத்துள்ளார். அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் நடத்திட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் .
பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளநிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக