வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

சாயி பாபா கலைஞரை தேடி வந்து பார்த்த காரணம் ... முற்பிறவியில் கலைஞர் ராஜ ராஜா சோழன் .. சத்திய சாயி பாபா ..

”உங்களுக்கெலாம் அவர் கருணாநிதி,,,எனக்கு அவர் ராஜராஜ சோழன்...” ஆம்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்றாராம்.. இதே விஷயத்தை கணபதி ஸ்தபதியும் என்னிடம் கூறியுள்ளார்..தமிழகத்தின் அத்தனை கட்டட அதிசயங்களையும் கலைஞரே நிர்மாணித்தார்... ...
கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய் பாபா வந்தார்..உலகமே அசந்தது..
பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்..
சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட பக்வான் சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்..
சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...,


அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. ”அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா எனக்கேட்டாராம்...
அதற்கு பாபா சொன்ன பதில் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினராம்..பாபா சொன்னாராம்..”


”உங்களுக்கெலாம் அவர் கருணாநிதி,,,எனக்கு அவர் ராஜராஜ சோழன்...”
ஆம்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்றாராம்..
இதே விஷயத்தை கணபதி ஸ்தபதியும் என்னிடம் கூறியுள்ளார்..தமிழகத்தின் அத்தனை கட்டட அதிசயங்களையும் கலைஞரே நிர்மாணித்தார்...
எனக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லை..
ஆனால், கலைஞர் நவீன ராஜராஜ சோழன் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை...
Narayanan Yoganathan முகநூல்பதிவு 

கருத்துகள் இல்லை: