சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் சென்னை வந்து சிகிச்சை அளிக்க உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தள்ளார்.
இந்த நிலையில் மன்னார்குடி ஜாம்பாவான்களான சசிகலாவின் உறவினர்கள் சென்னையில் முகாமிட்டு அனைத்து அதிமுக எம்எல்ஏக்களை வரவழைப்பது, அவர்களிடம் பேசுவது, ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள், ஆலோசனைகள் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவுக்கு உடனுக்கு உடன் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே மத்திய அரசு தமிழக நிலவரங்களை கூர்ந்து கவனித்து வருவதுடன், தமிழக அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பதால், உடனடியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சென்னை அனுப்பியதுடன் இல்லாமல், விமான நிலையத்தில் இருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி, முதல்வர் உடல்நிலை மற்றும் அதிமுக அரசின் நிலைப்பாடு குறித்தும் கவனிக்க சொல்லியிருக்கிறது.நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக