உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு வந்தது என தகவல் வெளியானது. அப்பல்லோ நிர்வாகமும் அந்த தகவலை அறிக்கையில் உறுதி செய்தது. கடந்த 5ம் தேதி (திங்கட் கிழமை) அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில், அன்று அவருக்கு என்ன நடந்தது என்பதை அப்பல்லோ நர்ஸ் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நாங்கள் அவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர் எங்களைப் பார்த்து அழகாக புன்னகைப்பார். எங்களிடம் சிரித்துப் பேசுவார். ஆனால், கடந்த ஞாயிற்றுகிழமை, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரின் அறைக்குள் சென்ற போது அவர் சிரிக்கவும் இல்லை. பேசவும் இல்லை.
சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவருடைய வெண்டிலேட்டர் கருவியை சோதனை செய்து பார்த்த பின்புதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். அதன்பின் அவர் கண் திறக்கவேயில்லை. திங்கட் கிழமை மரணமடைந்தார்” என 75 நாட்கள் அவருக்கு உதவிகள் செய்து வந்த நர்ஸ் ஒருவர் கூறியுள்ளர். வெப்துனியா .காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக