சனி, 10 டிசம்பர், 2016

வாகன விற்பனை கடும் சரிவு ..இரண்டு மாதங்களுக்கு கார் தயாரிப்பு நிறுத்தம்! மோடியின் எபெக்ட்


பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வர்த்தகத்துறையில் கடும் சரிவை ஏற்படுத்தி உள்ளது. சில்லறை வியாபாரிகள் முதல் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்திக்கான இடைக்கால ஓய்வை நீடிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
கார் தயாரிப்பாளர்கள் பொதுவாக டிசம்பர் மாதம் தங்களது உற்பத்தி பணிக்கு ஓய்வு கொடுப்பது வழக்கம். தற்போது பண மதிப்பிழப்பு அறிவிப்பால் பண நெருக்கடி நிலவி வருவதால், இந்த இடைக்கால ஓய்வு நீட்டிக்கப்பட உள்ளது. மாருதி, ஹோண்டா, ஹுண்டாய் போன்ற அனைத்து முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த மாதமும் அடுத்த மாதமும் தயாரிப்பு பணிகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கடந்த மாதம் வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கார் தயாரிப்பாளர்கள் தேவை குறைவைச் சந்தித்தனர். அதனால் தயாரிப்புகள் தேங்கி கிடந்தன. வியாபாரிகளிடம் இவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. வங்கிகளின் அழுத்தம் காரணமாக கடன் வழங்கல்களிலும் தாமதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக பயணிகள் வாகனம் விற்பனையில் 1.82 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கிட்டியுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த விற்பனையாகும். அதேபோல் இருசக்கர வாகன விற்பனையில் 6 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிக நிலவரம் மட்டுமே; மீண்டும் தயாரிப்பு பணிகள் தொடங்கி விற்பனை அதிகரித்த பின்னர் இது மறு பரிசீலனை செய்யப்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: