சென்னை,
பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார்.
இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக
குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில்
ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை
பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த
பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.
அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி
மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து
எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அஞ்சலி
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்
* மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த கேரள ஆளுனர் சதாசிவம், கேரள் முதல்வர் பிரணாய் விஜயன் சென்னை வருகை,
* மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு,கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், அரசு விழாக்களை ரத்து செய்ய உத்தரவு
* கேரள,கர்நாடக, புதுச்சேரி, உத்தரகாண்ட் , பீகார் மாநில அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
* திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து
* ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஒரு நாள் ரத்து
* மறைந்த ஜெயலலிதா உடலுக்கு திராவிட கழக தலைவர் கீ. வீரமணி அஞ்சலி
* ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ,வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர்கள் மன்சூர் அலிகான்,ராதாரவி அஞ்சலில் செலுத்தினர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்
* இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
‘அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா நினைவுகூரப்படுவார்.இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு; 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை
* ஜெயலலிதாவின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.சந்தியாவுக்கு மகளாக பிறந்து இந்தியாவின் மகளாக மறைந்த ஜெயலலிதா - கவிஞர் வைரமுத்து புகழாரம்
* நடிகர்கள் சங்கம் சார்பில் கார்த்தி,நாசர், பொன்வண்னன், ஒய்.ஜி மகேந்திரன் கோவை சரளா, சத்யராஜ, மனோபாலா,ஸ்ரீமான்,ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகைகள் கவுதமி, விந்தியா அஞ்சலி செலுத்தினர்.
* தி.மு.க பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆறுதல் கூறினார்.ஜெயலலிதா எந்த பொறுப்பேற்றாலும் அதில் தனி முத்திரை பதிக்க கூடியவர் என பாராட்டு தெரிவித்தார். அ.தி.மு.க நிர்வாகிகள் தொஇண்டர்களுக்கு ஆழ்ந்த் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். என கூறினார்.
* விடுதலை சிறுத்தைகள் தலைவர் .தொல்.திருமா வளவன் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக