இந்த நிலையில் இன்று சென்னையில் பேட்டியளித்துள்ள சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் உடலை சுற்றிக் கொண்டு சசிகலா கும்பல் சிரித்து கொண்டிருந்தது வேதனையாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா உடல் பக்கத்தில் நின்று ஒருசொட்டு கண்ணீர் கூட வடிக்காதவர் சசிகலா. அவரது உடலை சுற்றிக் கொண்டு சசிகலா கும்பல் சிரித்து கொண்டிருந்தது வேதனையாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவர், சசிகலா கும்பலால் ஒன்றும் ஜெயலலிதா உருவாக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துரோகிகள்
2011-ம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு தம்மை வெளியேற்றியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றே அதிமுக தொண்டர்கள் வேதனை படுகின்றனர் என்றும் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலா கும்பல்
தனது கணவனை பழிவாங்கிவிட்டார் என்பதற்காக ஜெயலலிதாவை சசிகலா பாடாய் படுத்திவிட்டார். ஜெயலலிதாவை ஏன் இழந்தோம் என்பதை அதிமுக தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் ஜெயலலிதா உடல்நலம் ஏன் திடீரென்று குன்றியது என்பதையும் யோசிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா மறைவு எனக்கு அரசியல் ரீதியாக பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு
சசிகலா கும்பலின் ஆட்டத்தால்தான் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது என சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த சசிகலாவின் கணவர் நடராஜன், புரட்சித்தலைவரின் இரட்டை இலையும் புரட்சித்தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் என்பதை தேர்வு செய்த மிக முக்கியமான தலைவர்களாக நாங்கள் இருந்தோம். அவர்களில் பலர் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக