


இளவரசி, விவேக், திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், விவேக்கின் மனைவி கீர்த்தனா என்று ஒரு பெருங்கூட்டமே உள்ளே இருந்துள்ளனர். ஒரு துக்க வீடு போலவே தான் போயஸ் கார்டன் காட்சியளிக்கிறது. சசிகலாவிடம் துக்கம் விசாரிப்பதற்காக மன்னார்குடி உறவுகளும், தொழிலதிபர்கள் சிலரும் போயஸ் கார்டனுக்கு வந்து போனபடியே இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை அந்தப்பக்கம் வர பயந்து நடுங்கியவர்கள்கூட இப்போது சர்வ சாதாரணமாக போயஸ் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அதேபோல அந்த பின்னி சாலையில் நுழைந்து ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டன் சாலைக்குள் அவ்வளவு சாதாரணமாக யாரும் நுழைந்துவிட முடியாது. காவல்துறையின் கெடுபிடிகள் ஏகத்துக்கும் இருக்கும். யார் வீட்டுக்குப் போறீங்க... என்று தொடங்கி நிறைய விசாரணைகள் நடக்கும். இப்போது அவ்வளவாக எந்த கெடுபிடிகளையும் காவல்துறை காட்டவில்லை. சாதாரணமாக எல்லோரும் அந்த சாலையில் போய் வருகிறார்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.
(எடப்பாடி பழனிச்சாமி)
“அதெல்லாம் சரி… ஓ.பி.எஸ். போயஸ் கார்டனுக்கு போனப்ப என்ன நடந்துச்சாம்?” என்று ஃபேஸ்புக் கேட்க… “இன்னைக்கு ஓ.பி.எஸ். போனப்ப சசிகலா இருந்திருக்காங்க… சசிகலாதான் எல்லாத்தையும் பேசியிருக்காங்க. அடுத்த பொதுச்செயலாளர் யார் என்று பேச்சு வந்தபோது, அதற்கு சசிகலா சொன்ன பதில், ‘அது அம்மா வகித்த பதவி அது அப்படியே இருக்கட்டும். திமுக-வில் இருக்கிற மாதிரி கட்சியோட தலைவரா நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். பொதுச் செயலாளருக்கான அதிகாரத்தை கட்சித்தலைவருக்கு மாற்றிக் கொள்வோம். முதலமைச்சர் பதவியில் பன்னீர்செல்வமே இருக்கட்டும். கட்சியோடு துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளட்டும்.

செங்கோட்டையனை பொதுப்பணித்துறை அமைச்சரா நியமிச்சுடலாம். அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனுக்கு வேறு பொறுப்பு தந்து விடலாம்’ என்று சசிகலா சொல்ல, எந்த பதிலும் சொல்லாமல் எப்போதும் போல பன்னீர்செல்வம் தலையை மட்டும் ஆட்டியிருக்கிறார்.
(மதுசூதனன்)
அநேகமாக வரும் 20ஆம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இந்த முடிவுகள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்” என்ற மெசேஜுக்கு சென்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது. மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக