திங்கள், 5 டிசம்பர், 2016

அரைக்கம்பத்தில் பரந்த அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது .. தொடர்ந்து Life support system

முதல்வர் ஜெ. மறைந்தார் என்ற தகவல் பரவியதால் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா(வயது 68) காலமானதாக தகவல் வெளியானது. 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர், சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது. முதல்வருக்கு தொடந்து தீவிர சிகிச்சை நடைபெறுவதாக அப்பல்லோ அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததாக வெளியான தகவலை அடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தற்போது மறுப்பு செய்தி வந்துள்ளதால் அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா(வயது 68) காலமானதாக தகவல் வெளியானது. 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர், சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது. முதல்வருக்கு தொடந்து தீவிர சிகிச்சை நடைபெறுவதாக அப்பல்லோ அறிவித்துள்ளது நக்கீரன்.இன் 

கருத்துகள் இல்லை: