மோடி : உன்னைய எனக்கு தெரியும் என்னைய உனக்கு தெரியும். ஆனா மக்களுக்கு நம்ம இருவரை பத்தியுமே தெரியாம இருக்கணும் அதுதான் முக்கியம் .தமிழக முதல்வர் ஜெயலலிதா.
மறைந்த சோகம் முடிவதற்குள் பல்வேறு அரசியல் நடந்து வருகிறது. உடன் பிறவா சகோதரி முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே அந்த பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தார். மத்திய அரசு விரும்பிய பன்னீர் செல்வம் தான் முதல்வர் பொறுப்பு ஏற்றார்.
இது சசிகலாவுக்கு கிடைத்த முதல் அடி. தற்போது பொதுச் செயலாளர் பதவிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆசைப்படுகிறார்.
இதுவும் மத்தியில் இருக்கும் பிரதமர் மோடியின் தயவால் தம்பிதுரைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், அதிமுகவில் பொது செயலாளர் பதவிக்கு குடுமிபிடி சண்டை துவங்கியதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவால் எதுவும் நேரடி நலன்கள் எதுவும் பெறாத சாதாரண தொண்டா்கள் சாரை சாரையாக அடக்கம் செய்யப்பட்ட இடம் முன்பு மொட்டை அடித்து கதறி அழுகின்றனா்.
அவா் உடன் இருப்பவா்கள் பதவிகளை கைப்பற்ற இன்றே சண்டையை துவக்கி விட்டது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது ?!முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக