இந்தியாவில் கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய்களுக்கு தடை விதித்தார்.
அதனால் ஏழை எளிய பொதுமக்கள் பழைய ரூபாயை மாற்ற வங்கிகளில் நின்று தவித்து வந்தனர்.
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் ரெட்டி தனது நண்பர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பீமான் நாயக் மூலம் 20 சதவீத கமிஷனுக்கு 100 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இவரது டிரைவர் ரமேஷ் கவுடா தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார். இறக்கும் போது ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தற்கொலைக்கு ஜனார்த்தனன்ரெட்டி கொடுத்த மனஉளைச்சலே காரணம் என்றும், அவர் 20 சதவீத கமிஷன் கொடுத்து 100 கோடி கருப்பு பணம் மாற்றியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தான் 500 கோடியில் தனது மகளுக்கு மிக பிரம்மாண்டமான திருமணத்தை நடத்தியவர். இவர் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக