வட்டமிடும் வல்லூறுகள்..
"""""""""""""""""""""""""""""""""""""""""""" இன்றைய 'தினமணி' நாளிதழில் வெளிவந்துள்ள வைத்தியநாதனின் தலையங்கத்தையும், அருகே இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் "ந பூதோ ந பவிஷ்டி" என்ற அழகு தமிழ்க் கட்டுரையுந்தான் நண்பரின் கவலைக்குக் காரணம்.
வைத்தியநாதன் எழுதியுள்ள தலையங்கத்தில் ஜெயா மரணத்திற்குப் பின் அதிமுக அரசிலும் கட்சியிலும் செய்துள்ள மாற்றங்களை ஆகா ஓகோ எனப் பாராட்டுகிறார். ஓபியை முதல்வராகவும் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுப்பது அற்புதமான் முடிவு என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் "பவிஸ்து பிவிஷ்து" கர்ட்டுரையில் 2011 தேர்தலுக்கு முன் அவர் ஜெயாவை சந்தித்த கதையைச் சொல்கிறார். ஜெயா திமுக, காங்கிரஸ் அரசுக்ளின் செயல்பாடுகள் குறித்துக் கவலைப் பட்டாராம். அவற்றை எதிர்கொள்ள இவர் ஒரு மாற்று உத்தியைச் சொன்னாராம் (வேறு என்னவாக இருக்க முடியும். பா.ஜ.க ஆதரவு என்பதாகத்தான் இருக்கும்). அதை ஜெயா ஏற்கவில்லையாம். ஆனால் அவரது 'உயிர்த் தோழி' ஏற்றுக் கொண்டாராம்.
அதாவது இவரது "ஆலோசனைகளுக்கு" ஜெயலலிதாவைக் காட்டிலும் சசிகலாவிடமே வரவேற்பு இருந்ததாம். இப்போது வைத்தியநாதன் சசிகலாவை அதிமுக பொ.செ ஆக ஆக்குவதைக் கொண்டாடுவதன் பொருள் விளங்கும். ஜெயலலிதாவின் உடல் அருகே அன்று ராஜாஜி மண்டபத்தில் வெங்கையாவும், பொன் ராதாகிருஷ்ணனும் கடைசிவரை உட்கார்ந்திருந்ததும் நரேந்திர மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் வழங்கியதையும் மறந்து விடக் கூடாது.
மாஃபியா கும்பலுக்குக் காசு ஒன்றே பிரதானம். கட்சியை உடைத்து பா.ஜ.க வல்லூறுகளுக்கு தமிழகத்தை விருந்தாக்க எல்லா வாய்ப்புகளும் காத்திருக்கிறது என்பதைத்தான் இதெல்லாம் காட்டுகிறது.
சும்மா ஆடுமா சோழியன் குடுமிகள்.. முகநூல் பதிவு மாக்ஸ் அந்தோணிசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக