சனி, 10 டிசம்பர், 2016

இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 அதிகாரிகள் கைது Ex-IAF chief SP Tyagi's to face court


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டதை இத்தாலி நீதிமன்றம் உறுதி செய்தது.
அந்த வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியின் பெயரும் இடம்பெற்றது.
இதனையடுத்து, எஸ்.பி.தியாகி உள்பட 14 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், எஸ்.பி.தியாகி அவரது சகோதரர் சஞ்சய் தியாகி மற்றும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் காய்தான் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஊழலை ஒப்புக்கொண்டதால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்கதிர்.இன்

கருத்துகள் இல்லை: