வெள்ளி, 9 டிசம்பர், 2016

பேரம் இன்னும் படியல்ல தொடர்கிறது ரெயிடு ... 170 கோடி, 130 கிலோ தங்கம்... முன்னே பிடிபட்ட570 கோடி காண்டேயினர்?


கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல், கருப்புப் பணத்தை கமிசனுக்கு வாங்கி செல்லும் ஏஜெண்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றன்ர். ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களது ஆடிட்டர் பிரேம் ஆகியோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததாக தகவல் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.


வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். சென்னை, தியாகராயர் நகர் விஜயராகவா சாலையில் உள்ள சீனிவாச ரெட்டியின் வீடு, சென்னை, தியாகராயர் நகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு, சென்னை அண்ணாநகரில் உள்ள சீனிவாச ரெட்டியின் மற்றொரு வீடு மற்றும் ஆடிட்டர் பிரேமின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 10வது கிழக்கு குறுக்கு தெருவில் அமைந்துள்ள சேகர் ரெட்டியின் மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்குப் பின்னர் சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல சென்னை, வேலூர், திருவள்ளுர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் றப்பட்டது. சுமார் 120 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கைப்பற்றப்பட்ட ரூபாய் 100 கோடியில், ரூபாய் 10 கோடி புதிய ரூபாய் நோட்டுன்ககள் உள்ளன. இந்த பணம் வங்கிகள் மூலம் மாற்றப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்பதால் பணம் அனைத்தும் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்த சந்தேகம் அதிகரித்துள்ளது.

திருப்பதி – திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான சேகர் ரெட்டி, தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில முக்கிய அரசியல் புள்ளிகள், உயர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்னார் சேகர் ரெட்டி. இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பதில் உள்ள கோ சாலைக்கு, அளிக்கப்பட்ட ரூபாய் 1 கோடி நன்கொடை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. செய்தி: -ராஜா. படங்கள்: ஸ்டாலின்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: