சனி, 10 டிசம்பர், 2016

ரெட்டி வீட்டில் இரண்டாவது நாளாகவும் ரெயிட் தொடர்கிறது ..

சேகர் ரெட்டி அம்மாவின் ஆசியால் திருப்பதியில் கடவுள் பணியில் ஈடுபட்டு வந்தவர். வேண்டியவர்களுக்கு அல்வா கொடுக்காமல் பிரசாத லட்டு கொடுத்தவர். மணல் அள்ளுதல், காண்ட்ராக்ட் போன்ற சமூக சேவையில் உள்ள இவர், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட மாட்டார். அ.தி.மு.க., பிரமுகரும் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின்
வீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரி, 'ரெய்டு' தொடர்ந்தது. நேற்று மட்டும், ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையால், தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையில், வங்கி ஏ.டி.எம்.,களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், சேகர் ரெட்டி, 10 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் பெற்றது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, பதுக்கல்காரர்களுக்கு, செப்டம்பர் வரை, மத்திய அரசு அவகாசம் தந்தது. அப்போது, தானாக முன்வந்து கணக்கு காட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.அதன்பின், வருமான வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் தப்பவில்லை.  ஆனால் அந்த மூன்று காண்டேயினர்களும் 570 கோடி ரூபாய்களும் இன்னும் அருண் ஜெட்லி ,அதிமுக ,அமித் ஷா மற்றும் மோடி போன்றவர்களின் பைகளில் சங்கமமாகி விட்டதாக பலரும் கருதுகிறார்களே?


கள்ள நோட்டு ஒழிப்பிற்காக, நவ., 8ல், செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. அதன்பின்,வங்கிகளில் முறைகேடாகபணத்தை மாற்றுவதும், தங்கத்தை வாங்கி குவிப்பதும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

அதனால், நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி ரெய்டு நடத்தி
வருகின்றனர். சென்னையிலும், நகைக் கடை களில் அதிரடி சோதனை நடத்தினர்; வாடிக்கை யாளர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., பிரமுகரும், அரசு பணி கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சீனுவாச ரெட்டி மற்றும் நண்பர்கள் பிரேம், ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்க ளில், நேற்று முன்தினம் காலையில் இருந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,தி.நகர்,யோகநாதன் தெருவில் உள்ள சேகர் ரெட்டி வீடு, விஜயராகவா சாலையில் உள்ள அலுவலகம், வேலுார், காட்பாடி வீடுகள், பெங்களூரில் உள்ள அலுவலகம், சென்னை, அண்ணா நகரில் உள்ள நண்பர் பிரேமின் வீடு என, ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பகலில்90 கோடி ரூபாய் ரொக்கம், 120 கிலோ தங்க கட்டிகளை, அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். பின், ரொக்கம் பறி முதல்,நள்ளிரவில், 100 கோடி ரூபாயாக உயர்ந் தது. நேற்றும் அந்த இடங்களில், சோதனை தொடர்ந்தது. இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது:சேகர் ரெட்டி தொடர்பான சோதனை யில், 100 பேர் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக சோதனை நடந்து வருகிறது. நேற்று மாலை வரை, 127 கிலோ தங்க நகைகள், 107 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது. அதில், 10 கோடி ரூபாய் அளவுக்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. அதனால்,வங்கிகளில் கறுப்பு பணத்தை முறை கேடாக மாற்றினாரா என, சந்தேகம் எழுந்தது. அந்த கோணத்திலும்,விசாரணை நடத்தினோம். இந்த சோதனையின் போது, நிலம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன; அவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் இது வரை நடந்த சோதனைகளில், இதுவே மிக அதிகம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு பின், நாட்டில் சிக்கிய மிகப் பெரிய தொகை இது.

அமைச்சர்கள் பீதி

சேகர் ரெட்டியின் அரசியல் தொடர்புகள் அதிகம்; அது பற்றியும் விசாரித்து வருகிறோம். சேகர் ரெட்டி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், அரசு துறைகளில் கான்ட்ராக்ட் பணிகளை நேர டியாக எடுத்து செய்துள்ளார். அதனால், அந்த துறை அமைச்சர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புள்ளது.
மேலும் அந்ததுறைகள் தொடர்பான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி ஆகியோ ருடனும், அவருக்கு நெருங்கிய உறவு இருக்கி றது. இதுதவிர, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினர் சிலருடன், நெருங்கி பழகியுள்ளார். தமிழக அரசின் உயர் பதவியில் இருப்பவருக்கும், அவருக்கும் நெருக்கம் இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. எனவே, அந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் துாக் கத்தை தொலைத்து, பீதி அடைந்து ள்ளனர். இவ்வாறு வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.2,000 நோட்டு: பரபரப்பு தகவல்!

பெங்களூரில், சில தினங்களுக்கு முன் நடந்த சோதனையில், ஆறு கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. அது, தனியார் வங்கியில் பெறப்பட்டது தெரியவந்தது. ஆனால், சேகர் ரெட்டி வீட்டில் சிக்கியுள்ள, 2,000 ரூபாய் நோட்டுகள்,வரிசைப்படி இல்லை. அவர், மணல் கான்ட்ராக்ட் பணியில் ஈடு பட்டுள்ளதால், அதில் வந்த தொகையாக இருக்கக் கூடும்.எனினும் அவருடைய வங்கிக் கணக்குகள், உறவினர்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை களை ஆய்வு செய்து வருகிறோம் என, வருமானவரிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: