வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெயலலிதா மறைவு ...உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.

ஜெயலலிதா மறைவு தாங்காமல் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. அ.தி.மு.க. அறிவிப்பு<>அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-> உலக மக்கள் நெஞ்சங்களில் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய ‘அம்மா’வாக என்றும் வாழும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டும், அவர் மண் உலகைப் பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன், காஞ்சீபுரம் மாவட்டம் முதலியார் குப்பத்தை சேர்ந்த பெருமாள், ஓரிக்கையை சேர்ந்த ராஜன், கரிமேட்டை சேர்ந்த பெரியநாயகி, நெல்வாய்கிராமத்தை சேர்ந்த ஜி.செல்லன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஆர்.குமாரவடிவேல், தாம்பரத்தை சேர்ந்த ஆர்.சற்குணம். திருவள்ளூர் மாவட்டம் பசியாவரக்குப்பத்தை சேர்ந்த சின்னக்குழந்தை, கொண்டஞ்சேரியை சேர்ந்த வடமலை, திருப்பாலைவனத்தை சேர்ந்த நைனியப்பன்.


மதுரை, திருச்சி
விருதுநகர் மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த எஸ்.சரவணன், திருத்தங்கலை சேர்ந்த டி.பொன்னுத்தாயி, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்புராஜ், மணக்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன், முதுகுடியை சேர்ந்த மகாலிங்கம்.

திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் ஊராட்சியை சேர்ந்த என்.சிவாஜி, வைரிசெட்டி பாளையத்தை சேர்ந்த சிங்காரம், ரெட்டிமாங்குடியை சேர்ந்த ஆரோக்கியம்.

மதுரை மாவட்டம் உத்தரப்புரம் தெற்கு தெருவை சேர்ந்த எஸ்.ராஜவேலு, இடையப்பட்டியை சேர்ந்த சவுந்தரம், அருக்கம்பட்டியை சேர்ந்த அடைக்கம்மாள்.

தஞ்சை, திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் சர்க்கார்புதூரை சேர்ந்த வெள்ளையப்பன், இந்திராநகரை சேர்ந்த தங்கம்மாள், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சி.கருணாகரன், குமாரஹள்ளியை சேர்ந்த சின்னசாமி, மோட்டூரை சேர்ந்த மணி, மதிக்கோன்பாளையத்தை சேர்ந்த முருகேசன்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஜே.மோகன்குமார், பள்ளிகொண்டாவை சேர்ந்த நாடியம்மை, கரந்தையை சேர்ந்த ரவீந்திரன். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த தங்கவேல், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன்.

கடலூர், வேலூர்
கடலூர் மாவட்டம் சனியோஜிப்பேட்டையை சேர்ந்த நீலகண்டன், நெய்வாசலை சேர்ந்த தங்கராஜ், பெண்ணாடத்தை சேர்ந்த துரைராஜ், ஆவிணன்குடியை சேர்ந்த சாமுண்டி, வேலூர் மாவட்டம் சாமுவேல் நகரை சேர்ந்த பேரரசன், நாட்டார்வட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாத்தூரை சேர்ந்த மோகன், அல்லியந்தல் காலனியை சேர்ந்த குள்ளம்மாள் மற்றும் சின்னத்தாய், வ.வு.சி.நகரை சேர்ந்த எஸ்.கமலாம்பாள், குன்னத்தூரை சேர்ந்த சுரேஷ், நரசிங்கநல்லூரை சேர்ந்த கெம்பு, கொத்தகுளம் காலனியை சேர்ந்த சண்முகம், சந்தை புதுப்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி, முருகானந்தலை சேர்ந்த முருகேசன்.

சேலம், கோவை
சேலம் மாவட்டம் பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த என்.லட்சுமணன், அரிசிபாளையத்தை சேர்ந்த ஜெயராமன், வேலக்கவுண்டனூரை சேர்ந்த அழகேசன், பொம்மியப்பட்டியை சேர்ந்த சின்னையன் என்கிற மாது, கண்ணங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தன், கிருஷ்ணரெட்டியூரை சேர்ந்த முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் சக்கிலிநத்தத்தை சேர்ந்த நாகராஜ், விளங்காமுடியை சேர்ந்த பாப்பாத்தியம்மாள். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தை சேர்ந்த மீனா,

கோவை மாவட்டம் செங்காளிபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள், சிங்காநல்லூரை சேர்ந்த ராசப்பன்.

ஈரோடு மாநகராட்சி 13-வது வட்டத்தை சேர்ந்த தாசன் என்கிற சிதம்பரம்,

நீலகிரி, பெரம்பலூர்நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மெண்டை சேர்ந்த வில்பிரட், குறியமலையை சேர்ந்த திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயரை சேர்ந்த ராமச்சந்திரன், சங்குப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதியை சேர்ந்த ராமையா, புதுநகரை சேர்ந்த பொன்னம்மாள், மேல்பொன்னான்விடுதியை சேர்ந்த மனுநாயகி, கணக்கன்காட்டை சேர்ந்த பாப்பு.

நாகை, நெல்லைநாகை மாவட்டம் உழுதுக்குப்பையை சேர்ந்த அசோகன், வேதாரண்யத்தை சேர்ந்த சோமு, திருமுல்லைவாசலை சேர்ந்த செல்வமணி, சிறுதலைக்காட்டை சேர்ந்த சாமிநாதன், வெள்ளிக்கிடங்கை சேர்ந்த வீரம்மாள். திண்டுக்கல் மாவட்டம் குட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி, சிலுக்குவார்பட்டியை சேர்ந்த காமாட்சி, நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த அருணாச்சலம், தென்காசியை சேர்ந்த விஜி என்கிற நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் சீம்பிலிவிளையை சேர்ந்த அசாங்கன் என்கிற பொடிக்கன்.

தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
அகால மரணமடைந்த மேற்கண்ட 77 பேரின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கட்சி சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

மேலும், ஜெயலலிதா உடல் நலம் குன்றிய செய்தி அறிந்து துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர் சிகிச்சை பெற்று வரும் கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், புதுகூரப்பேட்டை கிளைக் கழகச் செயலாளர் மு.கணேசன் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, கட்சி சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

அது போல், ஜெயலலிதா மறைந்த துக்கத்தில் தனது விரலை வெட்டிக்கொண்ட திருப்பூர் மாவட்டம், உகாயனூரைச் சேர்ந்த மாகாளி என்பவர் முழு சிகிச்சை பெற்று நலம் பெறத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, கட்சி சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை: